/tamil-ie/media/media_files/uploads/2019/10/Career_Banner102-3.jpg)
tamilnadu government job Fair , Guindy job fair, chennai jobs : தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்
IOCL Released Job Notification for Apprentice Posts: இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடட் ( ஐஒசிஎல்) சமீபத்தில், கிட்டத்தட்ட 500 டெக்னீசியன் அப்ரண்டிஸ், வர்த்தக அப்பரண்டீஸ் (Trade Apprentice posts) பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.
காலியிட விவரங்கள்
சுமார் 500 காலியிடங்கள் உள்ளன. பிராந்திய வாரியாக காலியிட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
டெக்னீசியன் அப்ரண்டிஸ்- வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து மூன்று ஆண்டுகள் முழுநேர டிப்ளோமா - மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் / சிவில் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இருத்தல் வேண்டும் . (எஸ்சி / எஸ்டி- 45 சதவீதம்)
வர்த்தக அப்ரண்டிஸ் : வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து எந்த படிப்புகளாய் இருந்தாலும், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
இரண்டு பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 , அதிகபட்ச வயது 24 (எஸ்.சி/எஸ்.டி.ஒபிசி போன்ற பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு ).
ஐ.ஓ.சி.எல் ஆட்சேர்ப்பு 2019: விண்ணப்பிப்பது எப்படி
ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான iocl.com க்கு செல்லவேண்டும்
ஸ்டேப் 2: ‘கேரியர்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்
ஸ்டேப் 3: தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்
ஸ்டேப் 4: பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும்
ஸ்டேப் 5: ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.