IOCL Recruitment 2019: ஐஒசிஎல் நிறுவனத்தில் 500 அப்பரண்டீஸ் காலி பணியிடங்கள் , விண்ணப்பிப்பது எப்படி ?

IOCL Recruitment Notification 2019: சுமார் 500 காலியிடங்கள் உள்ளன. பிராந்திய வாரியாக காலியிட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.  

IOCL Recruitment Notification 2019: சுமார் 500 காலியிடங்கள் உள்ளன. பிராந்திய வாரியாக காலியிட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government job Fair , Guindy job fair, chennai jobs : தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்

tamilnadu government job Fair , Guindy job fair, chennai jobs : தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்

IOCL Released Job Notification for Apprentice Posts:  இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடட் ( ஐஒசிஎல்)  சமீபத்தில், கிட்டத்தட்ட 500 டெக்னீசியன் அப்ரண்டிஸ், வர்த்தக அப்பரண்டீஸ் (Trade Apprentice posts) பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது.

Advertisment

காலியிட விவரங்கள்

சுமார் 500 காலியிடங்கள் உள்ளன. பிராந்திய வாரியாக காலியிட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மேலும் விவரங்களுக்கு

Advertisment
Advertisements

கல்வி தகுதி:

டெக்னீசியன் அப்ரண்டிஸ்- வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து மூன்று ஆண்டுகள் முழுநேர டிப்ளோமா -  மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் / சிவில் / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இருத்தல் வேண்டும் . (எஸ்சி / எஸ்டி- 45 சதவீதம்)

வர்த்தக அப்ரண்டிஸ் : வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து எந்த படிப்புகளாய் இருந்தாலும், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்

 

வயது வரம்பு: 

இரண்டு பணிகளுக்கும் குறைந்தபட்ச  வயது 18 , அதிகபட்ச வயது 24 (எஸ்.சி/எஸ்.டி.ஒபிசி போன்ற பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு ).

ஐ.ஓ.சி.எல் ஆட்சேர்ப்பு 2019: விண்ணப்பிப்பது எப்படி

ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான iocl.com க்கு செல்லவேண்டும்

ஸ்டேப் 2: ‘கேரியர்’ என்பதை  கிளிக் செய்ய வேண்டும்

ஸ்டேப்  3: தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்

ஸ்டேப்  4: பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும்

ஸ்டேப்  5: ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

 

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: