Advertisment

சென்னையில் மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை இர்கான் நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியர் பணியிடங்கள்; பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
ircon jobs

சென்னை இர்கான் நிறுவன வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இர்கான் (IRCON) நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2024

Advertisment

Works Engineer/Civil 

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ 36,000 

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.05.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited 2 nd Floor, Plot No 7(Adjacent to Qmax Systems), Rukmini Nagar, 4th Street, Poonamallie, Chennai - 600056

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment