இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் மற்றும் சுற்றுலா கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: இந்திய ஆயுதப் படைகளில் 1.55 லட்சம் காலிப் பணியிடங்கள்; மத்திய அரசு
Hospitality Monitors
காலியிடங்களின் எண்ணிக்கை: 48
கல்வித் தகுதி : B.Sc. in Hospitality and Hotel Administration/ Hotel Management and Catering Science/ BBA/ MBA படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 30,000
Tourism Monitors
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுற்றுலா சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://irctc.com/assets/images/Notification%20HM2023%20South%20Zone-Annex-II.pdf அல்லது https://irctc.com/assets/images/Notification%20TM2023%20South%20Zone%20Annex-I.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி : 10.04.2023, 11.04.2023
நேர்காணல் நடைபெறும் இடம் : Institute of Hotel Management 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai – 600113.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://irctc.com/assets/images/Notification%20HM2023%20South%20Zone-Annex-II.pdf அல்லது https://irctc.com/assets/images/Notification%20TM2023%20South%20Zone%20Annex-I.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.