தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய அரிய புவி கனிமங்கள் நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17 கடைசி தேதியாகும்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் மினரல்ஸ் லிமிடெட் (Indian Rare Earth Minerals Limited) நிறுவனத்தில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
காலியிடங்களின் விவரம்
Graduate Apprentices
Electrical – 2
Civil - 1
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு Electrical/ Civil பிரிவில் B.E முடித்திருக்க வேண்டும்.
Technician Apprentices
Mechanical - 1
Electrical – 1
Civil – 2
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு Electrical/ Civil/ Mechanical பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.
Trade Apprentices
Fitter – 8
Electrician – 5
Mechanic (Motor Vehicle) - 1
Welder – 4
Electronic/ Instrument Mechanic – 2
Refrigeration and Air Conditioning Mechanic - 1
Turner – 1
Plumber – 2
Carpenter – 2
கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
Lab Assistant (Chemical Plant) - 2
கல்வித் தகுதி: B.Sc Chemistry படித்திருக்க வேண்டும்.
PASAA – 3
கல்வித் தகுதி: COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி: 18 வயது முதல் 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 17.10.2024க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: The Chief Manager – HRM (Legal & ER), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamil Nadu – 629252.
மேலும் விவரங்களுக்கு https://irel.co.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.