’கிராமத்து சிறுவனின் கனவு நிறைவேறியது’; சென்னை ஐ.ஐ.டி.,யில் டாக்டர் பட்டம் பெற்றார் இஸ்ரோ தலைவர் சோமநாத்

ஐ.ஐ.டி சென்னை போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் டாக்டர் பட்டம் பெறுவது "பெரிய கவுரவம் – இஸ்ரோ தலைவர் சோமநாத்

author-image
WebDesk
New Update
somanath iit chennai

ஐ.ஐ.டி சென்னை போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் டாக்டர் பட்டம் பெறுவது "பெரிய கவுரவம் – இஸ்ரோ தலைவர் சோமநாத் (புகைப்படம் – ஐ.ஐ.டி மெட்ராஸ்)

விண்வெளி பொறியாளரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான சோமநாத் சென்னை ஐ.ஐ.டி.,யில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

Advertisment

சென்னை ஐ.ஐ.டி.,யின் 61வது பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சுமார் 2,636 அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன, இதில் பி.டெக் பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்களும் அடங்குவர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் பிரையன் கே கோபில்கா கலந்து கொண்டார்.

இந்தநிலையில், ஐ.ஐ.டி சென்னையின் இன்றைய பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் சோமநாத் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சோமநாத் ஏற்கனவே பல கவுரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருந்தார், இந்தியாவின் கனரக ஏவுகணையான லான்ச் மார்க் வெஹிக்கிள் மார்க்-3க்கான முன்னணி டெவலப்பராக பணியாற்றியதற்கும், நிலவின் தென் துருவத்தின் அருகே விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்தை வெற்றிகரமாக முன்னின்று நடத்தியதற்கும் என அவரின் பல பணிகளுக்காக ஏற்கனவே கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால் ஆராய்ச்சி மூலம் பி.எச்.டி பட்டம் பெறுவது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பைத் தொட்டபோது மகிழ்ச்சியில் திளைத்த நிலையில், தற்போது முனைவர் பட்டம் மூலம் சோம்நாத் மீண்டும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Advertisment
Advertisements

டாக்டர் சோமநாத் தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற பிறகு, ஐ.ஐ.டி சென்னை போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பட்டம் பெறுவது "பெரிய கவுரவம்." கிராமத்து பையனாக, நான் டாப்பராக இருந்தாலும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால் ஒரு நாள் நான் இங்கிருந்து பட்டம் பெறுவேன் என்று கனவு கண்டேன். புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூருவில் இருந்து முதுகலை பட்டம் பெற்றேன். மற்றும் இப்போது சென்னை ஐ.ஐ.டி.,யிலிருந்து பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

பி.எச்.டி படிப்பது எப்போதுமே கடினம், குறிப்பாக ஐ.ஐ.டி சென்னை போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் படிப்பது இன்னும் கடினம். இது ஒரு நீண்ட பயணம். பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தேன், ஆனால் ஆராய்ச்சிப் பாடம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. பல தசாப்தங்களுக்கு முன்பு இஸ்ரோ திட்டத்தில் பொறியாளராக நான் தொடங்கிய அதிர்வு தனிமைப்படுத்திகள் தொடர்பான தலைப்பு என் மனதில் உயிர்ப்புடன் இருந்தது, நான் பல ஆண்டுகளாக அதில் பணியாற்றினேன். இந்த முனைவர் பட்டம் எனது கடந்த 35 ஆண்டுகாலப் பணியின் பலன் என்று சோமநாத் கூறினார்.

டாக்டர் சோமநாத் தனது பள்ளிப்படிப்பை கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூரில் உள்ள செயின்ட் அகஸ்டின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், அதற்கு பின் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் படித்தார். கொல்லத்தில் உள்ள தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1985ல் இஸ்ரோவில் சேர்ந்த சோமநாத் தற்போது அதன் தலைவராக உயர்ந்துள்ளார்.

சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்குவது அவரது தலைமையில் பெரும் வெற்றி பெற்றது. ஆதித்யா-எல்1, எக்ஸ்போசாட், இன்சாட்-3டி.எஸ், என்.வி.எஸ்-01, ஓசன்சாட், ஜிசாட்-24 மற்றும் வணிகரீதியான பி.எஸ்.எல்.வி & எல்.வி.எம்3-ஒன்வெப் பணிகள் ஆகியவை சமீபத்திய வெற்றிகளில் சில. அவரது தலைமையின் கீழ் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (எஸ்.எஸ்.எல்.வி) மற்றும் சோதனை வாகனம் (டி.வி) உருவாக்கப்பட்டது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனத்தின் (ஆர்.எல்.வி-லெக்ஸ்) தரையிறங்கும் சோதனைகள் நிறைவேற்றப்பட்டன.

சோமநாத் இப்போது இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும், ககன்யான், சந்திரயான்-தொடர் மற்றும் பிற ஆய்வுப் பணிகள், பாரதிய அந்தரிக்ஷா நிலைய மேம்பாடு மற்றும் சந்திரனுக்கான மனிதப் பயணம் ஆகியவற்றை உள்ளடக்கிய விண்வெளி விஷன்-2047 பயணங்களில் சோமநாத் கவனம் செலுத்தி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Isro Iit Madras

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: