scorecardresearch

மகேந்திரகிரி இஸ்ரோ வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 63 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

isro
இஸ்ரோ வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் நெல்லை மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்தும வளாகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுனர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023

இதையும் படியுங்கள்: இஸ்ரோ வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 24

காலியிடங்களின் விவரம் : Mechanical – 15, Electronics & Communication – 4, Electrical – 1, Computer Science – 1, Civil – 3

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 44,900

Technician ‘B’

காலியிடங்களின் எண்ணிக்கை – 30

காலியிடங்களின் விவரம்: Fitter – 20, Electronic Mechanic – 3, Welder – 3, Refrigeration & AC – 1, Electrician – 2, Plumber – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700

Draughtsman ‘B’

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700

Heavy Vehicle Driver ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

Light Vehicle Driver ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

Fireman ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

வயதுத் தகுதி: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://career.iprc.gov.in/recruit/advt.jsp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iprc.gov.in/iprc/files/careers/Detailed%20Notification%20English.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Isro iprc recruitment 2023 application for 63 assistants posts apply soon