இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் நெல்லை மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்தும வளாகத்தில் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 10.02.2024 மற்றும் 11.02.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
GRADUATE APPRENTICE (ENGINEERING)
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
Mechanical Engineering - 10
Electronics Engineering - 10
Electrical Engineering - 05
Civil Engineering - 05
Instrumentation Engineering - 03
Chemical Engineering - 03
Computer Science Engineering - 05
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Bachelor’s Degree in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
TECHNICIAN APPRENTICE
காலியிடங்களின் எண்ணிக்கை: 44
Mechanical Engineering - 15
Electronics Engineering - 10
Electrical Engineering - 10
Civil Engineering - 05
Chemical Engineering - 04
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000
GRADUATE APPRENTICE (NON ENGINEERING)
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வித் தகுதி : Bachelor’s Degree (in Arts/ Science/ Commerce) படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
வயதுத் தகுதி: 03.02.2024 அன்று டெக்னீசியன் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். டிகிரி தகுதி பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:
Graduate Apprentice (Engineering) : 10.02.2024
Technician Apprentice : 10.02.2024
Graduate Apprentice (Non Engineering) : 11.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iprc.gov.in/files/careers/Apprentice/Advt%20No.%20IPRC-RMT-APP-2024-01.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“