இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) பொறியியல் விஞ்ஞானிகளுக்கான (எஸ்.சி) ஆட்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவில், எலெக்ட்ரிக்கல், குளிர்பதனம் / ஏர் கண்டிஷனிங் மற்றும் கட்டிடக்கலை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 21 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
கல்வி தகுதி:
சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் அல்லது அதற்கு நிகரான படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அனைத்து செமஸ்டர்களையும் சேர்த்து சராசரி 65% மதிப்பெண்கள் அல்லது சிஜிபிஏ பத்திற்கு 6.84 ஆக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடை தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு முறை நடை பெற்று வருகிறது. வரும் அக்டோபர் 14, 2019 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் நூறு வசூலிக்கப்படுகிறது. தேர்வர்கள் இணைய வங்கி / டெபிட் கார்டு அல்லது ‘ஆஃப்லைன்’ மூலம் அருகிலுள்ள எஸ்பிஐ கிளைக்குச் சென்று கட்டணம் செலுத்தலாம்.
தேர்வு செயல்முறை:
முதலில் விண்ணபத்தை சரி பார்க்கப்படும். டிசம்பர் இறுதிக்குள் தகுதியான தேர்வர்கள் ஜனவரி 12 ஆம் தேதி நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்குபட்டியலிடப்படுவார்கள்.இந்த எழுத்து தேர்வு, 2020 ஜனவரி 12 ஆம் தேதி நடத்தப்படும் என்று இஸ்ரோ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 12 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு, வேட்பாளர்கள் நேர்முகத் தேர்வுக்கு பட்டியலிடப்படுவார்கள்.