/tamil-ie/media/media_files/uploads/2019/08/isro.jpg)
ISO Recruitment 2019, ISRO Job Notification 2019
ISRO Recruitment 2019 for Scientist and Engineer Jobs : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவில் இன்ஜினியரிங் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இஸ்ரோ நிறுவனம். மொத்தம் 327 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
என்னென்ன பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது?
பி.இ, பி.டெக். அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பில் 65% மதிப்பெண்களை பெற்றவர்கள் மட்டும் கீழ் காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1. எலெக்ட்ரானிக்ஸ் (சயின்டிஸ்ட்/என்ஜினியர்) - 131
2. மெக்கானிக்கல் (சயின்டிஸ்ட்/என்ஜினியர்) - 135
3. கம்யூட்டர் சயின்ஸ் (சயின்டிஸ்ட்/என்ஜினியர்) - 58
4. எலெக்ட்ரானிக்ஸ் ஆட்டோனோமஸ் (சயின்டிஸ்ட்/என்ஜினியர்) - 03
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தேதிகள்
இந்த பணிகளுக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகின்ற 4ம் தேதி ஆகும் (நவம்பர்/04/2019). தேர்வுக்கட்டணம் 06/11/2019 அன்று கட்ட வேண்டும். தேர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12ம் தேதி நடைபெறும்.
ISRO recruitment 2019 exam fees : ரூ. 100 (பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி வகுப்பினருக்கு)
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் இனத்தோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ஏதும் கிடையாது. இந்த தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் செலுத்தலாம்.
இந்த தேர்வு குறித்த முழுமையான தகவல்களையும் நீங்கள் https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf - இங்கு படித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க https://apps.isac.gov.in/CentralBE-2019/advt.jsp இந்த பக்கத்திற்கு செல்லவும்.
சம்பளம்
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் சேர்பவர்களுக்கு ரூ.56,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.