டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்குக்கான (ஐ.எஸ்.டி.ஆர்.ஏ .சி) ஆட்சேர்ப்பு இஸ்ரோவில் நடத்தப்பட உள்ளது. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் என்ற செய்தித்தாளில் வெளியிடப்பட்ட இஸ்ரோ ஆட்சேர்ப்பு 2019 அறிவிப்பின்படி, ஐ.எஸ்.டி.ஆர்.ஏ .சிவில் மொத்தம் 4 புதிய காலியிடங்கள் உள்ளன. அவற்றில் 3 டெக்னிசியன் பி பதவிகளுக்கும், 1 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கும் உள்ளன. டெக்னிசியன் பி பணிக்கு ரூ .21,700 முதல் 69,100 வரையிலும், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ரூ 44,900 முதல் 1,42,400 வரையிலும் சம்பளம் பெற உடையவர்களாய் உள்ளனர் .
இஸ்ரோ ஆட்சேர்ப்பு 2019 க்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நான்கு காலி இடங்களில் 2 டெக்னிசியன் பி பதவிகள் லக்னோவில் நிரப்பப்படும் , மேலும் 1 டெக்னிசியன் பி மற்றும் 1 தொழில்நுட்ப உதவியாளர் பதவி போர்ட் பிளேரில் நிரப்பப்படும் .
மூன்று டெக்னிசியன் பி பதவிகளுக்கு, தகுதிகள் பின்வருமாறு : ஐ.டி.ஐ உடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி , எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் என்.டி.சி அல்லது என்.ஏ.சி தேர்ச்சி , எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சியுடன் மின் வர்த்தகத்தில் ஐ.டி.ஐ, என்.டி.சி அல்லது என்.ஏ.சி படிப்பு , 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர் வர்த்தகத்தில் ஐடிஐ, என்.டி.சி அல்லது என்.ஏ.சி உடன் 10ம் வகுப்பு தேர்ச்சி
மேலும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் கருவி, அல்லது மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பிரிவில் இஞ்ஜினியரிங் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் .
எப்படி விண்ணப்பிப்பது ?
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் குறித்து அதிகர்பூரமாக ISTRAC இணையத்தளத்தில் ஜூலை 29ந் தேதி முதல் தெரிந்துக் கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது . ஜூலை 29 காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 19 இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் முலமே விண்ணப்பிக்க வசதி உள்ளது . ஆர்வமுள்ளவர்கள் ISTRAC இணையதளத்தைத் தினமும் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்