182 காலி பணியிடங்கள்: இஸ்ரோ புது அறிவிப்பு

ISRO Recruitment 2020:

By: February 18, 2020, 3:06:22 PM

ISRO Job Notification 2020, Eligibility, Age Limit: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அறிவியல் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், தீயணைப்பு வீரர், நூலக உதவியாளர் போன்ற 30 துறைகளுக்கான  பணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் மார்ச் 6ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான isro.gov.in இல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதி மார்ச் 7ம் தேதி.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டிய கடைசி தேதி: மார்ச் 6

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: மார்ச் 7

பணியிடங்கள் விவரம்:  

தொழில்நுட்ப உதவியாளர்: 41 இடங்கள்

தொழில்நுட்ப வல்லுநர்: 102 இடங்கள்

ஃபயர்மேன்: 04 இடங்கள்

வரைவாளர் : 03 இடங்கள்

குக்: 05 இடங்கள்

இந்தி-டைப்பிஸ்ட் : 02 இடங்கள்

நூலக உதவியாளர்: 04 இடங்கள்

கனரக வாகன ஓட்டுநர்: 04 இடங்கள்

கேட்டரிங் உதவியாளர்: 05 இடங்கள்

அறிவியல் உதவியாளர்: 07 இடங்கள்

லைட் வாகன ஓட்டுனர் : 04 இடங்கள்

மேற்கண்ட பணிகளுக்கான ஊதியம் மற்றும் மற்றும் வயது வரம்பு குறித்த விவரம்:

கல்வித்தகுதி:
குக், ஃபயர்மேன், டெக்னிசியன்-பி, ஓட்டுநர் மற்றும் வரைவாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தொடர்புடைய டிப்ளோமா படிப்பை முடித்திருக்க வேண்டும் . நூலக உதவியாளர் மற்றும் விஞ்ஞான உதவியாளர் பணிகளுக்கு குறைந்தபட்சம் பட்டதாரி பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

 

விண்ணப்பிப்பது எப்படி:  apps.isac.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

நீங்கள் விண்ணப்பிக்கயிருக்கும் பணிகளை தேர்வு செய்ய வேண்டும்.

பின், கேட்கப்படும் தரவுகளை நிரப்ப வேண்டும்

புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Isro recruitment 2020 eligibility age limit how to apply at isro gov in170177

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X