இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 526 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இஸ்ரோவில் வேலை பார்க்க வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
இதையும் படியுங்கள்: சென்னை ரயில்வே குரூப் டி தேர்வு முடிவுகள்: வெளியான முக்கிய அப்டேட்
ASSISTANT
காலியிடங்களின் எண்ணிக்கை – 342
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
JUNIOR PERSONAL ASSISTANTS
காலியிடங்களின் எண்ணிக்கை – 154
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
UPPER DIVISION CLERKS
காலியிடங்களின் எண்ணிக்கை – 16
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
STENOGRAPHERS
காலியிடங்களின் எண்ணிக்கை – 14
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி: 09.01.2023 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apps.ursc.gov.in/CentralOCB-2022/advt.jsp என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2023
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/Advt.Asst.JPA.2022.Website.Bilingual.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil