scorecardresearch

ISRO Jobs: இஸ்ரோ வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 68 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ISRO Jobs: இஸ்ரோ வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இஸ்ரோவில் வேலை பார்க்க வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் இஸ்ரோ நிறுவனத்தில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2022

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Scientist/Engineer ‘SC’ (Electronics)

காலியிடங்களின் எண்ணிக்கை – 21

கல்வி தகுதி: BE/ B.Tech in Electronics & Communication Engineering முடித்திருக்க வேண்டும்.

Scientist/Engineer ‘SC’ (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை – 33

கல்வி தகுதி: BE/ B.Tech in Mechanical Engineering முடித்திருக்க வேண்டும்.

Scientist/Engineer ‘SC’ (Computer Science)

காலியிடங்களின் எண்ணிக்கை – 14

கல்வி தகுதி: BE/ B.Tech Computer Science Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 19.12.2022 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250, இருப்பினும் SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Nov/Advt_Sci_EngrSC_EMC_BILINGUAL.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Isro recruitment 2022 for 68 engineer posts apply online