/indian-express-tamil/media/media_files/mbcGqkzC8xaRZik5sJ0l.jpg)
இஸ்ரோ வேலை வாய்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் உதவியாளர் மற்றும் தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2024
ASSISTANT
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,500 – 81,100
JUNIOR PERSONAL ASSISTANT
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,500 – 81,100
வயதுத் தகுதி: 31.03.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.prl.res.in/OPAR/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2024
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்.சி/ எஸ்.டி/ பெண்கள்/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 100.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2024_March/Advertisement_Assistant_JPA2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.