இஸ்ரோவில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு – ஐடிஐ, டிப்ளமோ பட்டதாரிகளே விரைவீர்..

ISRO : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் ( ISRO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ISO Recruitment 2019, ISRO Job Notification 2019,
ISO Recruitment 2019, ISRO Job Notification 2019

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் ( ISRO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த ஐடிஐ மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள் : 86

பணி மற்றும் பணியிட விபரம்:-
தொழில்நுட்ப வல்லுநர் : 40 பணியிடங்கள்
ஃபிட்டர் – 20 பணியிடங்கள்
எலக்ட்ரானிக் மெக்கானிக் – 15
பிளம்பர் – 2
வெல்டர் – 1
இயந்திரவியலாளர் -1
டிராப்ட்ஸ்மேன்: 12
டிராப்ட்ஸ்மேன் (இயந்திரம்) – 10
டிராப்ட்ஸ்மேன் (மின்சாரவியல்) – 02
தொழில்நுட்ப உதவியாளர் : 35
மெக்கானிக்கல் – 20
எலெக்ட்ரானிக்ஸ் – 12
சிவில் – 3

கல்வித்தகுதி : 10, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ, என்டிசி, என்ஏசி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றினை முடித்திருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

சம்பளம்

தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் டிராப்ட்ஸ்மேன் பணியிடத்திற்கு ரூ.21,700
தொழில்நுட்ப வல்லுநர் பணியிடத்திற்கு ரூ.44,900 வரை

தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை https://www.isro.gov.in/careers என்ற இணையபக்கத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

கடைசி நாள் : செப்டம்பர் 13 , 2019

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த லும் விபரங்களை அறிய இஸ்ரோ அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.

Web Title: Isro recruitment iti diploma engineering graduates

Next Story
ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!வேலைவாய்ப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com