இஸ்ரோ வேலை வாய்ப்பு; 13 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 13 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 13 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

author-image
WebDesk
New Update
isro

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2025

Advertisment

PROJECT SCIENTIST-I

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.E/ M.Tech in Agricultural Engineering / Agricultural Information Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 56,000

PROJECT ASSOCIATE – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: M.Sc. in Geo-informatics/ Remote Sensing / GIS படித்திருக்க வேண்டும். மேலும் 

சம்பளம்: ரூ. 31,000

PROJECT ASSOCIATE – I 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B. Tech in Computer Science/ Data Science படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 31,000

PROJECT ASSOCIATE – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: M. Sc. in Agricultural Sciences (Agricultural Meteorology/ Agricultural Physics/ Agronomy/ Crop Physiology/ Soil Science/ Plant Pathology/ Agricultural Statistics/ Agricultural Economics/ Agricultural Analytics/ Agricultural Informatics/ Agricultural Technology) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 31,000

வயதுத் தகுதி: 22.09.2025 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் மத்திய அரசு விதிகளின் படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.sac.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Isro Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: