இஸ்ரோவில் தொழிநுட்ப உதவியாளர் பணி – சில தகவல்கள் இங்கே

ISRO Recuritment 2019 : தேர்ந்தெடுக்கும் முறை:  எழுத்து தேர்வு, ஸ்கில் தேர்வு போன்றவைகள் மூலம்  தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .

By: November 24, 2019, 5:16:55 PM

ஆந்த்ரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இஸ்ரோ சதீஸ் தவான் ஸ்பேஸ் சென்டரில் தொழில்நுட்ப உதவியாளர்( டெக்னிக்கல் அசிஸ்டன்ட்), அறிவியல் உதவியாளர் , நூலக உதவியாளர் ‘ஏ’ போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஆன்லைன் செயல்முறையைத் துவங்கியுள்ளது.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (1 ), கெமிக்கல் இன்ஜினியரிங் (04) , சிவில் இன்ஜினியரிங் (04) , கம்புயூட்டர் சையின்ஸ் இன்ஜினியரிங் (03) , எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (05) , எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (05) , எலெக்ட்ரானிக்ஸ் அண்ட்  இன்ஸ்ட்ருமென்டேஷன் ( 02),   மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  (16 ) ,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சர்டிபிகேஷன் (01), எம்.எஸ்.சி பிசிக்ஸ் (01),   நூலக உதவியாளர் A ( 01 ), பைன் ஆர்ட்ஸ் (போட்டோகிராபி- 01 ) போன்ற துறைகளில் இருக்கும் 45 பணிக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு – விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது 18-35 க்குள் இருத்தல் வேண்டும் (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடம் விலகு அளிக்கபப்டும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடம் விலக்கு அளிக்கப்படும்  )

முக்கிய தேதிகள் :  

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் – 23-11-2019

விண்ணபிக்க கடைசி தேதி – 13-12-2019

ISRO recuritment important dates இஸ்ரோ விண்ணப்பிக்க முக்கியத் தேதிகள் 

 

இந்த இணைய தள முகவரிக்கு நேரே சென்று விண்ணபிக்கலாம்

 

தேர்ந்தெடுக்கும் முறை:  எழுத்து தேர்வு, ஸ்கில் தேர்வு போன்றவைகள் மூலம்  தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . தேர்வு தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Isro shar technical assistant scientific assistant online application begins

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X