மாணவர்களிடமிருந்து எதிர்கால பணிகளுக்காக ரோபோ ரோவர்களின் யோசனைகள் மற்றும் வடிவமைப்புகளை இஸ்ரோ அழைக்கிறது. யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC) விண்வெளி ரோபோட்டிக்ஸ் துறையில் மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக ‘இஸ்ரோ ரோபோட்டிக்ஸ் சவால், URSC-2024’ ஐ நடத்துகிறது. நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை மாணவர்கள் பதிவுப் படிவத்தை முன்மொழிவுடன் சமர்ப்பிக்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: ISRO Space Challenge: URSC invites ideas, designs of robotic rovers
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது மற்றும் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் ஆய்வு செய்த பிறகு, எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் பிற வான் பொருட்களுக்கு ரோபோ ஆய்வு பணிகளுக்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள தேசிய விண்வெளி நிறுவனம், நிறுவன நோக்கங்களுக்கு ஏற்ப தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளில் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்க தனித்துவமான வாய்ப்புகளை உருவாக்க உறுதி பூண்டுள்ளது, எனத் தெரிவித்துள்ளது.
விண்வெளி ரோபாட்டிக்ஸ் எதிர்கொள்ளும் நிஜ வாழ்க்கை சவால்களின் அடிப்படையில் பணிகளைச் செய்து, பூமிக்கு அப்பாற்பட்ட அரங்கில் போட்டியிடுவதற்காக நிறுவனக் குழுக்கள் ரோபோக்களை உருவாக்கும் ஒரு பொறியியல் திட்டத்தை உள்ளடக்கியது.
“முழுமையான வன்பொருள் மற்றும் மென்பொருளின் வளர்ச்சியை உள்ளடக்கிய ‘சக்கரங்களுடன் கூடிய/ கால்களுடன் கூடிய ரோவர்’ வடிவமைத்து செயல்படுத்துவதற்கான மாணவர் சமூகத்திற்கான அழைப்பு இது. IRoC-U 2024 இல் மாணவர்கள் வழங்கிய தீர்வுகள் ISROவின் எதிர்கால கிரகங்களுக்கிடையிலான ரோபாட்டிக்ஸ் பணிகளில் இணைக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன,” என்று ISRO அறிக்கை கூறியது.
சவாலின் நோக்கங்கள்:
- விண்வெளி ரோபாட்டிக்ஸ் பகுதியை ஆராய்வதற்கான தரப்படுத்தப்பட்ட தளத்தை வழங்குதல்
- விண்வெளி ரோபாட்டிக்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய ஆழமான புரிதலை மாணவர் சமூகத்தில் உருவாக்குதல்
- விண்வெளி ரோபாட்டிக்ஸ் துறையில் தேவைப்படும் எதிர்கால தொழில்நுட்பங்களை (மாணவர்கள் மற்றும் இஸ்ரோ) இணைந்து உருவாக்குதல்
தேவையான பணிகளைச் செய்வதற்கான இறுதி வளாக நேரடி போட்டி ஆகஸ்ட் 2024 இல் URSC பெங்களூரு வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“