இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2025
Assistant (Rajbhasha)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 15.04.2025 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 25,500 – 81,100
Light Vehicle Driver - A
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகுரக ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 15.04.2025 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
Heavy Vehicle Driver - A
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 15.04.2025 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
Fireman A
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போதிய உடற்தகுதி இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 15.04.2025 அன்று 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
Cook
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 15.04.2025 அன்று 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.vssc.gov.in/DetailedAdvt332.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.vssc.gov.in/DetailedAdvt332.html என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.