scorecardresearch

ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து ஆகுமா? அரசு முடிவு என்ன?

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வு எழுத வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

It has been reported that the teacher appointment examination will be cancelled
ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து ஆகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வு எழுத வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியாக நியமன தேர்வை ரத்து செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதாக கூறியது.
ஆனால் 2 வருஷங்கள் ஆகியும் அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாததால் தற்போது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதையடுத்து இவர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அரசாணை எண் 149 ன் படி ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு வாரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆலோசனை நடத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மே 2023ல் நடைபெறும்.
இதில் 6553 காலியிடங்கள் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும். இதில் 3587 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: It has been reported that the teacher appointment examination will be cancelled

Best of Express