ஐடி நிறுவனங்களில் பாலின பன்முகத்தன்மையை மேம்படுத்த பெண்களை அதிக அளவில் பணியமர்த்த ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் முன்னனி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை, இந்த ஆண்டு கல்லூரிகளில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சுமார் 60,000 பெண்களை வேலைக்கு அமர்த்த வாய்ப்புள்ளது.
தி எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், சிறந்த இந்திய ஐடி சேவை நிறுவனங்களில், இந்த ஆண்டு நுழைவு நிலை பணிகளில் வேலைக்கு அமர்த்தும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூ மூலம், HCL இல் பணியமர்த்தப்பட்ட புதிய ஊழியர்களில் 60% பெண்கள். விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவை 50% பெண்களை வேலைக்கு அமர்த்த இலக்கு வைத்துள்ளன. இது, TCS ஐ பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்ததைப் போல 38-45 % ஆக இருக்கும்.
இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது 33% பாலின வேறுபாடு விகிதத்தை கொண்டுள்ளது, இது பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க தொழில் தலையீடுகளின் விளைவாகும் என்று தொழில்துறை அமைப்பு நாஸ்காம் தெரிவித்துள்ளது.
HCL, இந்த ஆண்டு நுழைவு மட்டத்தில் மொத்தம் 22,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதில் 50% பெண்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. ” எங்கள் திறமைக்குழுவை நுழைவு மட்டத்திலிருந்து தொடங்கி உருவாக்கினால் இது நிகழலாம்” என்று தலைமை மனிதவள அதிகாரி அப்பாராவ் விவி கூறினார்.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் படிப்படியாக பெண்களை பணியமர்த்துவதை அதிகரிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், HCL இல் நுழைவு மட்டத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் 40% பெண்கள்.
“டிஜிட்டல் திறமைக்கான தேவை உயர்ந்து வருவதால், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, கேம்பஸ் இண்டர்வியூ, கலப்பின வேலை மாதிரிகள் மற்றும் திறன் மேம்பாடு மூலம் அதிகரிக்கிறது” என்று நாஸ்காமின் மூத்த துணைத் தலைவர் சங்கீதா குப்தா கூறினார்.
இன்போசிஸ் நிறுவனமும் தங்கள் ஆட்சேர்ப்பில் ஆண் – பெண் சம எண்ணிக்கையை இலக்காக கொண்டுள்ளது. எனினும், நாங்கள் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்துகிறோம், ”என்று மனிதவளத் தலைவர் ரிச்சர்ட் லோபோ கூறினார்.
இன்போசிஸ் 2030 ஆம் ஆண்டுக்குள் 45% பெண் ஊழியர்களைக் கொண்டிருக்க இலக்கு வைத்துள்ளது. 2022 ஆம் நிதியாண்டில், சுமார் 35,000 கல்லூரி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தவும் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், 40,000 புதியவர்களில் 15,000-18,000 பெண்களை வேலைக்கு அமர்த்த வாய்ப்புள்ளது.
இந்நிறுவனத்தில் தற்போது 185,000 பெண்கள் பணியில் உள்ளனர். “டிசிஎஸ் பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கிடையே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது” என்று அதன் தலைமை மற்றும் பன்முகத்தன்மை அதிகாரி ரிது ஆனந்த் கூறினார்.
இந்த ஆண்டு 30,000 வளாக வேலைவாய்ப்புகளை உருவாக்க விப்ரோ திட்டமிட்டுள்ளது, அவர்களில் பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. தற்போது, விப்ரோவில் சுமார் 35% ஊழியர்கள் பெண்கள்.
“வளாகத்தில் வேலைக்கு அமர்த்தும் பாலின வேறுபாடு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று விப்ரோவின் தலைமை மனிதவள அதிகாரி சௌரப் கோவில் கூறினார்.
தொற்றுநோயானது வீட்டிலிருந்து வேலை பார்ப்பது மற்றும் நெகிழ்வான வேலை மாதிரிகளை, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் அதிகரித்துள்ளது. இது திறமை வாய்ந்த பெண்களை வேலைக்கு அமர்த்த சாதகமான விஷயம் என்று நாஸ்காம் அமைப்பின் குப்தா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil