பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, என்ஜினீயரிங் மாணவர்களின் சாய்ஸ் ஃபில்லிங் பற்றி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் சாய்ஸ் ஃபில்லிங்கின் அவசியம் பற்றி கூறியுள்ளார். தொடர்ந்து, அவர் கூறுகையில், “பொதுவா இதில் ஒன்றை கவனித்துக்கொள்ள வேண்டும். அதாவது எந்தத் கல்லூரி மற்றும் விரும்பும் பாடத்தில் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
Advertisment
அதாவது இதில் உங்களுக்கு என்ன தேவை என்பதை முழுவதுமாக எழுதிவைத்துக் கொள்ள வேண்டும். ஒரே பெயரில் பல்வேறு கல்லூரிகள் உள்ளன. எனவே கல்லூரி எண் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். 177 கட் ஆப் இருந்தால் கடந்த காலங்களில் எப்படி சீட் கொடுக்கப்பட்டது.
அந்தக் கல்லூரியின் அடிப்படை கட்டமைப்புகள் முதல் அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். இது சாய்ஸ் ஃபில்லிங்குக்கு அவசியமாக இருக்கும்” என்றார். தொடர்ந்து, எந்தெந்த கோர்ஸ்கள் முக்கியம், எப்படி சாய்ஸ் ஃபில்லிங்கை தேர்ந்தெடுப்பது என பல்வேறு முக்கியத் தகவல்களை அவர் பகிர்ந்துக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“