ஐ.ஐ.டி மெட்ராஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் சேர்க்கையை கூட்டுப் பொறியியல் நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ) முதன்மைத் தேர்வு மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு மூலம் நடத்துகிறது. ஐந்தாம் ஆண்டு இறுதியில் எம்.டெக் மற்றும் பிடெக் பட்டங்களுக்கு வழிவகுக்கும் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் ஐந்தாண்டுக்கான இரட்டைப் பட்டப் படிப்பையும் ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்குகிறது.
JEE அட்வான்ஸ்டுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 30 முதல் மே 4 வரை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் 4-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் மற்றும் பிற தகுதிகள் உடைய மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் JOSAA கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்படும்.
இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி-ல் கல்வியை பாதியில் நிறுத்திய 19,0000 எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, மாணவர்கள்
ஐ.ஐ.டி மெட்ராஸின் கடந்த ஐந்து ஆண்டுகளின் சாதிப் பிரிவு வாரியான கட்-ஆஃப்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி மெட்ராஸ்: CSE கட்-ஆஃப் 2022
பிரிவு (Category) | Cut off (Opening) | Cut off (Closing) |
Open | 6 | 167 |
Open (female only) | 425 | 617 |
EWS | 25 | 34 |
OBC - NCL | 37 | 88 |
SC | 33 | 53 |
ST | 19 | 23 |
ஐ.ஐ.டி மெட்ராஸ்: CSE கட்-ஆஃப் 2021
பிரிவு (Category) | Cut off (Opening) | Cut off (Closing) |
Open | 85 | 163 |
Open (female only) | 363 | 644 |
EWS | 21 | 37 |
OBC - NCL | 19 | 89 |
SC | 34 | 57 |
ST | 16 | 24 |
ஐ.ஐ.டி மெட்ராஸ்: CSE கட்-ஆஃப் 2020
பிரிவு (Category) | Cut off (Opening) | Cut off (Closing) |
Open | 49 | 158 |
Open (female only) | 204 | 576 |
EWS | 22 | 37 |
OBC - NCL | 35 | 92 |
SC | 10 | 54 |
ST | 3 | 23 |
ஐ.ஐ.டி மெட்ராஸ்: CSE கட்-ஆஃப் 2019
பிரிவு (Category) | Cut off (Opening) | Cut off (Closing) |
Open | 90 | 188 |
Open (female only) | 349 | 690 |
EWS | 16 | 17 |
OBC - NCL | 45 | 83 |
SC | 8 | 48 |
ST | 16 | 28 |
ஐ.ஐ.டி மெட்ராஸ்: CSE கட்-ஆஃப் 2018
பிரிவு (Category) | Cut off (Opening) | Cut off (Closing) |
Open | 51 | 200 |
Open (female only) | 209 | 417 |
OBC - NCL | 49 | 89 |
SC | 22 | 63 |
ST | 13 | 37 |
இந்த ஆண்டு JEE முதன்மைத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகிறது: அமர்வு 1 பிப்ரவரி 4 அன்று முடிவடைந்தது, அமர்வு 2 ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அமர்வு இரண்டிற்கான பதிவு செயல்முறை பிப்ரவரி 15 அன்று தொடங்கி மார்ச் 12 அன்று முடிவடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.