/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-trichy.jpeg)
ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2023: கடந்த 5 ஆண்டுகளில் என்.ஐ.டி திருச்சியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவு வாரியான கட்-ஆஃப் விவரம் இதோ...
JEE Advanced 2023: இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NITs), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) மற்றும் பிற அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTIs) ஆகியவற்றில் சேர்வதற்கான கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) கவுன்சிலிங் நடந்து வருகிறது.
இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் 31 என்.ஐ.டி.,களில் ஒன்று – என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி அல்லது என்.ஐ.டி திருச்சி. இது பொறியியல், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மைக்கான முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதையும் படியுங்கள்: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு: 12 கல்லூரிகளில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை
NIRF 2023 தரவரிசையின்படி, NIT திருச்சிராப்பள்ளி நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒன்பதாவது இடத்தையும், கட்டிடக்கலை கல்லூரிகளில் நான்காவது இடத்தையும், அதன் ஆராய்ச்சி ரேங்கில் 22 ஆவது இடத்தையும், மேலாண்மை நிறுவனங்களில் 35 வது இடத்தையும், அதன் ஒட்டுமொத்த தரவரிசையில் 21 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சிராப்பள்ளி 10 இளங்கலைப் படிப்புகளையும், பல்வேறு துறைகளில் 26 முதுகலைப் படிப்புகளையும், அனைத்துத் துறைகளிலும் பி.எச்.டி படிப்புகளையும் வழங்குகிறது. இந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தரவரிசையைப் பார்ப்போம்.
2023
/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-2023.jpg)
2022
/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-2022.jpg)
2021
/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-2021.jpg)
2020
/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-2020.jpg)
2019
/tamil-ie/media/media_files/uploads/2023/07/nit-2019.jpg)
NIT திருச்சிராப்பள்ளி இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியாக 1964 இல் பிராந்திய பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 2003 இல் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி என மறுபெயரிடப்பட்டது. இது தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சட்டம் 2007 மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.