Advertisment

JEE Advanced 2024; தேர்வுத் தேதி அறிவிப்பு; ஏப்ரலில் விண்ணப்பப் பதிவு ஆரம்பம்

ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேர்வு தேதி அறிவிப்பு: ஐ.ஐ.டி மெட்ராஸ் மே 26 அன்று தேர்வை நடத்த திட்டம்; ஏப்ரல் மாதம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

author-image
WebDesk
New Update
JEE advanced

JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு தேதி அறிவிப்பு (பிரதிநிதித்துவ எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஜஸ்பிர் மல்ஹி)

JEE Advanced 2024: கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) அட்வான்ஸ்டு 2024க்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. JEE Advanced 2024 தேர்வு மே 26 அன்று நடைபெற உள்ளது. JEE Advanced 2024 விண்ணப்ப சாளரம் ஏப்ரல் 21 அன்று திறக்கப்பட்டு ஏப்ரல் 30, 2024 முடிவுடையும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: JEE Advanced 2024 Exam Date: IIT Madras to hold exam on May 26; registration in April

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (IIT) சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களின் தேர்வுப் பட்டியலைப் பட்டியலிடுவதற்காக நடத்தப்படும் JEE Advanced, 2024 தேர்வு IIT மெட்ராஸால் நடத்தப்படுகிறது. JEE Main 2024 தேர்வின் முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் JEE Advanced 2024 தேர்வு எழுத முடியும். அவர்கள் https://jeeadv.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேதிகளின்படி, JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 17 அன்று வழங்கப்படும். IIT மெட்ராஸ் தற்காலிக விடைக்குறிப்புகளை ஜூன் 2 அன்று வெளியிடும், JEE அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் 2024 ஜூன் 9 அன்று அறிவிக்கப்படும்.

JEE கட்டிடக்கலை திறன் தேர்வு (AAT) 2024 க்கான பதிவு ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 10 வரை தொடரும். AAT 2024 தேர்வு ஜூன் 12 ஆம் தேதி நடத்தப்படும் மற்றும் ஜூன் 15 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும். கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JoSAA) கவுன்சிலிங் செயல்முறை தற்காலிகமாக ஜூன் 10 அன்று தொடங்கும்.

JEE அட்வான்ஸ்டு 2024 முக்கிய தேதிகள்

JEE அட்வான்ஸ்டு 2024 ஆன்லைன் விண்ணப்பப் பதிவு: ஏப்ரல் 21, 2024 முதல் ஏப்ரல் 30, 2024 வரை

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: மே 6, 2024

ஹால் டிக்கெட் பதிவிறக்கம்: மே 17, 2024 முதல் மே 26, 2024 வரை

மாற்றுத்திறனாளிகள் / 40% க்கும் குறைவான ஊனமுற்றவர்கள் மற்றும் எழுதுவதில் சிரமம் உள்ளவர்கள் எழுத்தாளரை தேர்வு செய்வதற்கான தேதி: மே 25, 2024

JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு தேதி: மே 26, 2024

JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் பதில்களின் நகல் இணையதளத்தில் வெளியிடப்படும் தேதி: மே 31, 2024

தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் தேதி: ஜூன் 2, 2024

தற்காலிக விடைக்குறிப்புகள் குறித்து கருத்துகள் பெறுவதற்கான தேதி: ஜூன் 2, 2024 முதல் ஜூன் 3, 2024 வரை

இறுதி விடைக்குறிப்பு மற்றும் JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: ஜூன் 9, 2024

ஐ.ஐ.டி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு 2024 தகவல் சிற்றேட்டை https://jeeadv.ac.in/ இல் வெளியிடும். JEE அட்வான்ஸ்டு 2024 தகவல் சிற்றேட்டில் தகுதி அளவுகோல்கள், பதிவுக் கட்டணம் மற்றும் தேர்வின் பிற விவரங்கள் அடங்கியிருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Iit Madras Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment