கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) இன்று ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2025க்கான தேர்வுத் தேதியை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு மே 18, 2025 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Advanced 2025 exam on May 18
தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும் (தாள் 1 மற்றும் தாள் 2) இதற்கு தலா மூன்று மணிநேரம் வழங்கப்படும். இரண்டு தாள்களையும் எழுதுவது கட்டாயம். ஜே.இ.இ அட்வான்ஸ்டு தாள் 1 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், தாள் 2 மதியம் 2:30 முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடைபெறும்.
இம்முறை, கூட்டு நுழைவுத் தேர்வு வாரியம் (JAB) கூட்டு நுழைவுத் தேர்வுக்கான (JEE Advanced) முயற்சிகளின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து மூன்றாக உயர்த்தியது. இருப்பினும், அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, கூட்டு நுழைவுத் தேர்வு வாரியம் இந்த முடிவை திரும்பப் பெற்று, ஜே.இ.இ அட்வான்ஸ்டு முயற்சிகளின் எண்ணிக்கை தொடர்பான முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட முந்தைய தகுதி அளவுகோலை மீட்டெடுத்தது.
"நவம்பர் 05, 2024 தேதியிட்ட பத்திரிக்கை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோலை மீறி, ஜே.இ.இ அட்வான்ஸ்டு முயற்சிகளின் எண்ணிக்கை தொடர்பான முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட முந்தைய தகுதி அளவுகோலை மீட்டெடுக்க கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) முடிவு செய்துள்ளது. நவம்பர் 15, 2024 அன்று நடைபெற்ற கூட்டு சேர்க்கை வாரிய கூட்டத்தில் பல்வேறு போட்டித் தேவைகளைப் பரிசீலித்த பிறகு. 2013 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட முந்தைய தகுதி அளவுகோல்களை மீட்டெடுக்கிறது. மற்ற அனைத்து தகுதி அளவுகோல்களும் அப்படியே இருக்கும்,” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு அக்டோபர் 1, 2000 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தேர்வு எழுதலாம். எஸ்.சி (SC), எஸ்.டி (ST) மற்றும் மாற்றுத்திறனாளி (PwD) விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு வழங்கப்படுகிறது, அவர்கள் அக்டோபர் 1, 1995 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பிற தகுதிகள் அப்படியே உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“