/tamil-ie/media/media_files/uploads/2017/07/Exam-result.jpg)
jee advanced result,
மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு இன்றியமையாதது ஆகும். இந்நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கான முடிவுகள் ரூர்கி ஐஐடி இணையதளத்தில் இன்று வெளியாகியது.
IIT-Roorkee Declares JEE Advanced Result 2019:
ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு கடந்த மே மாதம் 27ஆம் தேதி நடந்தது. முதற்கட்டமாக நடந்த ஜே.இ.இ. பிரதான தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதல் 2 லட்சத்து 24 ஆயிரம் இடங்களைப் பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வுக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
இவர்களை அனைவரும் ஜே.இ.இ. பிஅட்வான்ஸ் தேர்வை எதிர்க் கொண்டிருந்தனர் . இதற்கான முடிவுகளை ரூர்கி ஐஐடி நிறுவனம் தனது இணையத்தில் இன்று வெளியிட்டுள்ளது. www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வாளர்கள் பார்க்கலாம்.
தேர்வு முடிவுகள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியல் பிரிவு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனியாக தரச்சான்றிதழ் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ அடவான்ஸ் தேர்வில் தேர்வில் தேரச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். அதில் அவர்களுக்கு விருப்பமான கல்லூரியில் இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வில் மும்பையைச் சேர்ந்த மாணவர் கார்த்திகே குப்தா சந்திரேஷ் 346 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.