scorecardresearch

NIRF Ranking: டாப் 20 பொறியியல் கல்லூரிகளில் 5 தமிழகத்தில்; முழு லிஸ்ட் இங்கே!

ஜே.இ.இ தேர்வு 2023; இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

Tamil News
Tamil News Updates

ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

ஜே.இ.இ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு, இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான நுழைவுத் தேர்வாகும். இந்தியாவில் முதன்மைக் கல்வி நிறுவனங்களாக ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி போன்றவை உள்ளன. இவற்றில் இடம் பெற ஜே.இ.இ தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

இதையும் படியுங்கள்: டைம்ஸ் உலக பல்கலை. தரவரிசை; ஐ.ஐ.டி.,க்களின் புறக்கணிப்பை திரும்ப பெற அளவுருக்களில் மாற்றம்

இந்தியாவில் உள்ள 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 25 ஐ.ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெற கடும் போட்டி இருக்கும். மேலும் சில தனியார் கல்லூரிகளிலும் சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவும்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) இந்தியாவில் உள்ள கல்லூரிகளை தரவரிசைப்படுத்தியுள்ளது. NIRF படி இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகள் எவை என்பதன் பட்டியலை இப்போது பார்ப்போம். தேசிய அளவில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் தமிழ்நாட்டில் 5 கல்லூரிகள் உள்ளன.

டாப் 20 பொறியியல் கல்லூரிகள்

  1. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) சென்னை, தமிழ்நாடு
  2. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) நியூ டெல்லி, டெல்லி
  3. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) பாம்பே, மகாராஷ்டிரா
  4. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) கான்பூர், உத்திரபிரதேசம்
  5. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) காரக்பூர், மேற்கு வங்கம்
  6. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) ரூர்க்கி, உத்தரகாண்ட்
  7. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) கவுகாத்தி, அஸ்ஸாம்
  8. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) திருச்சி, தமிழ்நாடு
  9. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) ஹைதராபாத், தெலுங்கானா
  10.  தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) சுரத்கல், கர்நாடகா
  11.  ஜடவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா, மேற்கு வங்கம்
  12.  வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (வி.ஐ.டி) வேலூர், தமிழ்நாடு
  13.  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) வாரணாசி, உத்தரபிரதேசம்
  14.  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (இந்திய சுரங்க பள்ளி) தன்பாத், ஜார்கண்ட்
  15.  தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) ரூர்கேலா, ஒடிசா
  16.  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) இந்தூர், மத்தியபிரதேசம்
  17.  அண்ணா பல்கலைக்கழகம், சென்னை, தமிழ்நாடு
  18.  வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் பாம்பே, மகாராஷ்டிரா
  19.  அமிர்த விஸ்வா வித்யாபீடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
  20.  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மண்டி, ஹிமாச்சல் பிரதேசம்

இந்த டாப் கல்லூரிகளின் பட்டியல் ஜே.இ.இ தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்ய உதவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Jee exam 2023 top engineering colleges list in india