JEE Mains Tamil News: டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளில், 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு JEE-Mains தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதனைக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
JEE-Mains க்கான முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட JEE-Mains தேர்வில் டெல்லியைச் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் ட்வீட்டில், ``டெல்லி அரசுப் பள்ளிகளின் 510 மாணவர்கள் இந்த ஆண்டு JEE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் JEE தேர்வுகளில் தகுதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை முறையே, 2020- 510, 2019- 473, 2018- 350. ஒவ்வொரு மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். டெல்லி அரசு பள்ளிகளின் மற்றொரு பெரிய சாதனை இது.’ என குறிப்பிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட JEE-Mains மாணவர்கள் தயாராக இருந்த நிலையில், JEE தேர்வு மையங்களில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு மற்றும் வெளியேறுவதற்கு தனித்தனி வழிகள், சானிடிசர்கள், முகமூடி அணிவது கட்டாயம், வரிசையில் நிற்கும்போது தூரத்தை பராமரித்தல் போன்றவை நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. ஜே.இ.இ-மெயின்ஸ் தேர்வில் மொத்தம் 8.58 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில், 74 சதவீதம் பேர் மட்டுமே தேர்வுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"