Engineering Competitive Exams List: அறிவியல் மாணவர்களிடையே மிகவும் பிரபலமான தொழில் விருப்பங்களில் பொறியியல் ஒன்றாகும். கூட்டு நுழைவுத் தேர்வுக்கு (முதன்மை) சுமார் 10 முதல் 11 லட்சம் பேர் தேர்வு செய்கிறார்கள், இது மிகப்பெரிய தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வாகும்.
Advertisment
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
இந்த உயர் போட்டியின் மத்தியில், ஐ.ஐ.டி-ஜே.இ.இ தேர்வில் 2.5 லட்சம் வேட்பாளர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருகிறார்கள். சிலர் தங்களுக்கு பிடித்தமான வேறு கல்லூரிகளுக்கு செல்கின்றனர், பலர் அடுத்த ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு தயாராகிறார்கள்.
Advertisment
Advertisements
வேட்பாளர்கள் சேர்க்கை பெற இன்னும் ஒரு வருடம் காத்திருக்க தேவையில்லை. அவர்கள் KIITEE, VITEEE, MET, LUPNEST, மற்றும் SRMJEEE போன்ற பல்வேறு தனியார் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
VITEEE 2020 – வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு (VITEEE) பொறியியல் ஆர்வலர்களுக்கு முக்கிய தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகமாகும். தற்போது, இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. 2020 ஏப்ரல் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரத்தில் தேர்வு நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், vit.ac.in என்ற இணைய தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
LPUNEST 2020 – லவ்லி நிபுணத்துவ பல்கலைக்கழகம் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான தேசிய நுழைவு மற்றும் உதவித்தொகை தேர்வை நடத்துகிறது. இந்த LPUNEST நுழைவுத் தேர்வாகவும், மாணவர்களுக்கு உதவித்தொகை தேர்வாகவும் செயல்படுகிறது. செப்டம்பர் 2019 வெளியிடப்பட்ட LPUNEST முதற்கட்ட தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் கடைசி தேதி ஜனவரி 9, 2020 ஆகும் . எல்.பி.யுவில் சேர்க்கை பல கட்டங்களில் செய்யப்படுகிறது. முதற்கட்ட தேர்வு வரும் ஜனவரி மாதம் 10 முதல் 25 தேதி வரையிலும், இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 10ம் தேதி முதல் 25 வரை நடத்தப்படுகிறது. nest.ipu.in என்ற இணையதளத்திற்கு மாணவர்கள் விண்ணபிக்கலாம்.
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SRMIST) நடத்தும் பொறியியல் நுழைவுத் தேர்வு (SRMJEE) மூலம் காட்டங்குளத்தூர், ராமபுரம், வடபழனி , காஜியாபாத், எஸ்ஆர்எம் (ஆந்திரா ) – அமராவதி, எஸ்ஆர்எம் (ஹரியானா) – சோனேபட் போன்ற எஸ்ஆர்எம் கல்விநிறுவனங்களில் மாணவர்கள் சேர முடியும். சமீபத்தில் வந்த இந்த அறிவிப்பின்படி, SRMJEEE 2020 ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 12 ம் தொடங்கி 20 ம் தேதிவரை வரை நடத்தப்படுகின்றன . இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறுவதற்கான காலக்கெடு 2020, மார்ச் 30 ம் தேதியாகும். ஆஃப்லைனில் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 29 ம் தேதியாகும். தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தேர்வர்கள் தங்களுக்கு பொருந்தக் கூடிய தேர்வு இடம் மற்றும் தேதி போன்றவைகளை பதிவு செய்யலாம்.
மணிப்பூர் நுழைவுத் தேர்வு (MET 2020 ) – மணிப்பூர் பல்கலைக்கழகம் தனது பி.டெக் படிப்புகளுக்கு மணிப்பால் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை அனுமதிக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படுகிறது. தற்போது இதற்கு விண்ணப்பிக்கும் செயல்முறை நடைமுறையில் உள்ளது. 10 + 2 தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பதிவு செய்ய தகுதியானவர்கள்
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி நுழைவுத் தேர்வு (KIITEE): கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பிடெக் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேருவதற்கான பொதுவான நுழைவுத் தேர்வை நடத்துகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் kiitee.kiit.ac.in ல் கிடைக்கிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 தேதியாகும்.
விண்ணப்ப கட்டணம் வசூலிக்காத தேர்வுகளில் இந்த KIITEE ஒன்றாகும். தேர்வு 2020 ஏப்ரல் 14 முதல் 23 வரை நடைபெறும். பி.டெக் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி - 2018, 2019 அல்லது 2020 இந்த ஆண்டுகளில் வேட்பாளர்கள் 10 + 2 தகுதி பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் 60% பெற்றிருக்க வேண்டும்.