JEE Main Online Applications 2019 Begins: ஏப்ரலில் நடக்கவிருக்கும், ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான முன்பதிவு இன்று (பிப்ரவரி 8) துவங்கியுள்ளது. இந்தத் தேர்வை எழுத நினைப்பவர்கள் jeemain.nic.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
இணையாதளம் மூலமாக தேர்வாளர்கள் விண்ணப்பிக்கும் போது, அப்ளிகேஷன் நம்பரை எதிர்கால தேவைகளுக்காக மறக்காமல் குறித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் போது, பாஸ்வேர்ட் உருவாக்க, பாதுகாப்பு கேள்வியை தேர்ந்தெடுத்து, அதற்கான பதிலளிக்க வேண்டும். அப்ளிகேஷன் நம்பர் பாஸ்வேர்டை எதிர்கால லாக் இன் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், ஸ்கேன் செய்த ஃபோட்டோ மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், சல்லான் மூலமாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.
ஏப்ரலில் நடக்கும், ஜே.இ.இ மெயின் தேர்வு 2019-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி, மார்ச் 7, 2019. ஆன்லைனில் பணம் செலுத்த கடைசி தேதி, மார்ச் 8, 2019.
இரண்டு பேப்பர்களாக நடத்தப்படும் இத்தேர்வில், முதல் தாள் பி.இ/பி.டெக் பிரிவினருக்கும், இரண்டாம் தாள் பி.ஆர்க்/பி.பிளானிங் பிரிவினருக்கும் பொருந்தும். விண்ணப்பதாரர்கள் ஒன்று அல்லது இரண்டு தேர்வையுமே எழுதலாம்.
இந்த ஜே.இ.இ மெயின் தேர்வு 2019, ஏப்ரல் 6, 2019-ல் நடக்கவிருக்கிறது. தொடர்ந்து ஏப்ரல் 30-ம் தேதி இதன் முடிவுகள் வெளியாகும்.
ஜே.இ.இ மெயின் தேர்வு 2019-க்கான முக்கிய தேதிகள்
ஜே.இ.இ மெயின் ஆன்லைன் முன்பதிவு - 08.02.2019 முதல் 07.02.2019 வரை
பணம் செலுத்த - 08.02.2019 முதல் 08.03.2019 (11.30PM) வரை
தேர்வு நாள் - 06.04.2019 (ஞாயிற்றுக்கிழமை), 20.04.2019 (சனிக்கிழமை)
முடிவு வெளிவரும் நாள் - 30 ஏப்ரல் 2019.