Appearing for both JEE Main and UPSC NDA? ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வு, யுபிஎஸ்சி என்.டி.ஏ ஆகிய இரண்டு தேர்வையும் ஒரு நாளில் சந்திக்கின்றீர்களா ? தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) உங்களுக்காக ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது.
ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த மாதம் 31 வரை தேசியத் தேர்வு முகமை விண்ணப்ப படிவத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இரு தேர்வுகளுக்கும் தோன்றும் வேட்பாளர்கள் அனனைவரும் தங்கள் விண்ணப்ப படிவத்தில் இதுகுறித்த தகவலை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ‘ஆம்’ என்ற பதிலை புதுப்பிக்க வேண்டும்.
தொற்று பரவியுள்ள சூழ்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி நலம் ஆகியவற்றை உறுதி படுத்தும் வகையில் ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வு (Mains) வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இருப்பினும், செப்டம்பர் 6ஆம் தேதி யுபிஎஸ்சி-ன் என்டிஏ, என்ஏ தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. செப்டம்பர் 6 ஆம் தேதி என்.டி.ஏ பரீட்சை எழுதும் மாணவர்கள், அதே நாளில் ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு தோன்றுவதை தடுக்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகளை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) அறிமுகப்படுத்தியது.
முன்னதாக, ஒரே தேதியில், இரண்டு தேர்வுகளில் தோன்றுவது குறித்து மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார். பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil