பல விவாதங்களுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த (JEE) பொறியியில் முதன்மை தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த, ஜேஇஇ தேர்வுக்கு, 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தற்போது தொற்று பரவியுள்ள சூழ்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி நலம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
தொற்றினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேர்வுகள் நடத்தப்படும் போது, உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகங்களின் வழிகாட்டு நெறிகளைக் கட்டாயம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
தேசியத் தேர்வு முகமை (NTA), தேர்வு மையங்களின் எண்ணிக்கையை 570 லிருந்து 660 ஆக உயர்த்தியுள்ளது. தேர்வு நடத்தப்படும் மையங்களில் தனிநபர் இடைவெளி உறுதியாகக் கடைப்பிடிக்கப்படும். அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன
தேர்வு அறைக்குள் நுழைவது எப்படி?
படி 1: பதிவு அறை நுழைவு வாயிலில், மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும் ;
படி 2 : வெப்பநிலை அளவு (<37.4 ° C / 99.4 ° F) என்று இருந்தால், வழக்கமான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்;
படி 3 : வெப்பநிலை (> 37.4 ° C / 99.4 ° F) என்று இருந்தால், தனிஅறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு வெப்ப நிலை இயல்புக்கு திரும்பவில்லையென்றால், தனிமைப்படுத்தும் அறைக்கு அழைத்து சென்று தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்;
படி 4 : மாணவர்கள் தங்களது அட்மிட் கார்டு, செல்லுபடியாகும் ஏதேனும் ஒரு அரசு அடையாளச் சான்று, மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் (பி.டபிள்யூ.டி பிரிவு மாணவர் என்றால்) ஆகியவற்றை இன்விஜிலேட்டரிடம் காண்பிக்க வேண்டும் ;
படி 5: சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு, பதிவு எண் அடிப்படையில் அவர்களின் தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்;
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்