ஜேஇஇ முதன்மை தேர்வில் முறைகேடு நடந்ததா?

கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 9 வரை நடத்தபப்ட்ட ஜேஇஇ முதன்மை தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பொறியியல் (ஜேஇஇ) முதன்மை தேர்வு  கடந்த மாதம் ஜனவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரையில் நடைபெற்றது. தேர்வின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சில போட்டோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகிவருகின்றது. ஜேஇஇ முதன்மை தேர்வின் முடிவு ஜனவரி 17 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

அந்த ஸ்கிரீன் ஷாட் போட்டோவில் வாட்டர்மார்க் நம்பரும், மேல் இடது மூலையில் ‘தேசிய தேர்வு முகமை’ என்றும் பதிவிடப் பட்டுள்ளது. இந்த ஸ்கிரீன் ஷாட்டில் உள்ள கேள்விகள் ஜனவரி மாதம் நடந்த ஜேஇஇ முதன்மை  தேர்வுடன் பொருந்துகின்றதா ?   என்பதை உறுதி செய்ய பல தேசிய அளவிலான பயிற்சி நிறுவனங்களை இந்தியன்எக்ஸ்பிரஸ்.காம் அணுகினாலும், போதிய பதில் கிடைக்கவில்லை.

இந்த ஸ்க்ரீன்ஷாட் போட்டோ முதன் முதலில் கேள்வி-பதில் தளமான quora என்ற  வலைதளத்தில் ஜனவரி 9 ஆம் தேதி காலை 11:49 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருகின்றன. ஜேஇஇ முதன்மை தேர்வு அதே தேதியில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

தகவலை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப்பில் இந்த ஸ்கிரீன்ஷாட் படங்களை பரப்பிய மாணவர்களை தொடர்பு கொண்டபோது, “ டெலிகிராம் சார்ந்த குரூப்பில், இந்த போட்டோவை கண்டறிந்தோம். மேற்படி தகல்வலகளை நாங்கள் அவர்களிடம்  கேட்டபோது, ​எங்களை அந்த குரூப்பில் இருந்தே நீக்கி விட்டனர்” என்றனர்.

மேலும், அவர் கூறுகையில்,“ஸ்க்ரீன்ஷட் போட்டோவில்  தெரியும்  பதிவு நம்பர் தேர்வு எழுதும் அனைவருக்கும் இருக்கும். பாதுக்காப்பு அம்சத்திற்காக இந்த நம்பர் பயன்படுத்தபப்டுகிறது.  எந்த தேர்வரின் கணினியிலிருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பதனை இதன் மூலம் கண்டரியலாம். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை என்பதுதான் குழப்பமாக இருக்கின்றது என்றார்.

எந்தவொரு மின்னணு தகவல்தொடர்புகளையும் தடை செய்ய அனைத்து தேர்வு மையங்களிலும் ஜாமர்கள்  பயன்படுத்தப்படுகிறது. எனவே, தேர்வு மையங்களில் இருந்து படங்கள் எவ்வாறு வெளியே பகிரப்பட்டன ? என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது.

மற்றொரு ஆர்வலர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவிக்கையில், தேர்வர்கள் அனைவரும் தொலைபேசிகளை தேர்வு மையங்களுக்கு வெளியே வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். “பாதுகாப்பு நோக்கங்களுக்காக நான் எனது தொலைபேசியை என்னுடன் தேர்வுக்கு எடுத்துச் செல்லவில்லை. இன்விஜிலேட்டர்கள் கூட தேர்வு மையங்களுக்குள் தொலைபேசியை எடுத்து வரவில்லை, என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தேர்வர்கள், இந்த ஸ்க்ரீன்ஷாட்டை சமூக வலைதளங்களில் பரப்புவதன் மூலம் தவறை என்.டி.ஏ- விற்கு  கொண்டு செல்கின்றோம் என்றார்.

எவ்வாறாயினும், எந்தவொரு முறையான புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

டைரக்டர் ஜெனரல், என்.டி.ஏ, வினீத் ஜோஷி, ஜாமர்கள் இருப்பதால்,எந்தவொரு மின்னணு தகவல்தொடர்புகளும் உடனடியாக அடையாளம் காணப்பட்டிருக்கும், தங்களுக்கு எந்தவிதமான புகாரும் வரவில்லை என்றும், என்.டி.ஏ நடத்திய தேர்வுகளில் “கசிவு ஏற்பட வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.

ஜனவரி 2020 தேர்வின் வினாத்தாள்களை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வின் சுமூகமான மற்றும் நியாயமான நடத்தைக்கு மேற்பார்வை செய்வதற்காக 570 மையங்களில் மொத்தம் 536 பார்வையாளர்கள், 213 நகர ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 19 பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள் நிறுத்தப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close