ஜேஇஇ மெயின் தேர்வு: கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்அதிகரிக்க வாய்ப்பு

JEE Main 2021 Exam Expected cut-off : கடந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்ணை விட சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வரும் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த பொறியியல்  நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ மெயின் 2021) கடந்த பிப்ரவரி 26ம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 90 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

FIITJEE என்ற கல்வி நிறுவனத் தலைவர் ரமேஷ் பாட்லிஷ் கூறுகையில், “கடந்தாண்டு கட்-ஆஃப் மதிப்பெண்ணை விட சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மீதமுள்ள  ஏப்ரல், மே மாத அமர்வுகளைப் பொறுத்து உண்மையான கட்-ஆஃப் மதிப்பெண் அமையும்” என்று தெரிவித்தார்.

ராய் இன்ஸ்டிடுயூட் ( கொல்கத்தா ) கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சினேகாஷ் பானர்ஜி கூருகையில்  “ பொது பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண்  90 முதல் 100 வரை என்றளவில் வேறுபடலாம்,  இடஒதுக்கீடு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 60- 70 என்றளவில் இருக்கும். 200க்கு மேல் மதிப்பெண் பெறும் தேர்வர்கள் 90  – 100 விழுக்காடு மதிப்பெண்களை பெற முடியும்” என்று தெரிவித்தார்.

வித்யா மந்திர் கல்வி நிலைய இயக்குனர் சவுரப் குமார் கூறுகையில், “இந்த ஆண்டு கட்-ஆஃப்  90 முதல் 100 வரையிலான விழுக்காடு மதிப்பெண்வரை இருக்கும்.  இந்த ஆண்டு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததால், கட்-ஆப் மதிப்பிலும் பாதிப்பு உணரப்படும். சில கேள்விகள் பழைய சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து வந்தவை. ”

இந்த ஆண்டு பிப்ரவரி மாத ஜேஇஇ தேர்வுக்கு மொத்தம் 6.61 லட்சம் (6,61,776) மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். வினாத்தாளின் கடின நிலை ஒவ்வொரு அமர்வுக்கு ( காலை, மாலை) ஏற்ப மாறுபட்டதாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

நடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வின் உத்தேச விடைகள் (ஆன்ஸ்ர் கீ) அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து முடிவு அறிவிக்கப்படும்.

ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் ஜேஇஇ தேர்வு, வரும் கல்வியாண்ல் இருந்து ஜேஇஇ தேர்வை மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம். பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் (மார்ச் (15- 18) , ஏப்ரல் (27 to 30) & மே (24 to 28) தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jee main 2021 exam expected cut off jee feburary exam paper analysis

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com