JEE Main 2021 Exam February Session : ஒருங்கிணைந்த பொறியியியல் முதன்மை நுழைவுத் தேர்வு இன்று (பிப்- 23) முதல் 26-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. பொதுவாக, தேர்வின் முதல் அமர்வு ஜனவரி மாதத்தில் தொடங்கும். இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது.
ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் ஜேஇஇ தேர்வு, வரும் கல்வியாண்ல் இருந்து ஜேஇஇ தேர்வை மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம். பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் (மார்ச் (15- 18) , ஏப்ரல் (27 to 30) & மே (24 to 28) தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
மேலும், மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் விண்ணப்பித்த பாடத்தின் படி தேர்வு முறை மாறுபடும். BTech க்கு விண்ணப்பித்தவர்கள் பேப்பர் -1, இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch), இளநிலை வடிவமைப்பாளர் (BDes), படிப்புகளுக்கு விண்ணபித்த மாணவர்கள் முறையே 2A மற்றும் 2B பிரிவுகளிலும் தோன்ற வேண்டும்.
பி.டெக்/ பி.இ படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு:
இளநிலை கட்டிடக்கலைஞர் (BArch) படிப்புக்கான தேர்வு:
இளநிலை வடிவமைப்பாளர் (BDes) படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வு:
தேர்வு மையம்: தமது அனுமதிச் சீட்டுடன், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற உண்மையான அடையாளச் சான்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். மின்னணு அனுமதிச்சீட்டில் உள்ளவாறு ஒரு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வர வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். பால் பாயிண்ட் பேனா, தண்ணீர் பாட்டில், விண்ணப்பதாரருக்கு நீரழிவு நோய்க்கான பாதிப்புகள் இருந்தால் சர்க்கரை நோய் மாத்திரைகள் / பழங்கள் (வாழைப்பழம் / ஆப்பிள் / ஆரஞ்சு போன்றவை) எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. 50 மில்லி அளவுள்ள கை சானிட்டைசர் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
நியாயமற்ற தேர்வு வழிமுறைகளில் ஈடுபடும் விண்ணப்பதாரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும்.
விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் http://www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 8287471852, 8178359845, 9650173668, 9599676953 மற்றும் 8882356803 மின்னஞ்சல் தொடர்புக்கு [email protected]
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil