scorecardresearch

JEE Main 2021; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20; என்.டி.ஏ அறிவிப்பு

JEE Main 2021 May session: NTA extends last date for registration, gap between third and fourth session increased: 2021 JEE முதன்மைத் தேர்வின் அமர்வு 4 இப்போது ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1-2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

JEE Main 2021; விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20; என்.டி.ஏ அறிவிப்பு

2021 ஆம் ஆண்டிற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வின் 4ஆம் கட்ட அமர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை தேசிய தேர்வு முகமை நீட்டித்து அறிவித்துள்ளது. இதன்படி தற்போது விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20. எனவே, தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காத, ஆனால் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதனிடையே JEE Main 2021 தேர்வின் அமர்வு 3 மற்றும் அமர்வு 4 க்கு இடையிலான இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. “மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதற்காக, 2021 ஜே.இ.இ முதன்மைத் தேர்வின் அமர்வு 3 மற்றும் அமர்வு 4 க்கு இடையில் நான்கு வார இடைவெளியை வழங்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார்.

அதன்படி, 2021 JEE முதன்மைத் தேர்வின் அமர்வு 4 இப்போது ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1-2 ஆகிய தேதிகளில் நடைபெறும். 2021 JEE முதன்மைத் தேர்வின் அமர்வு 4 க்கு ஏற்கனவே மொத்தம் 7.32 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை தேர்வு மையங்களின் எண்ணிக்கையை 232 லிருந்து 334 ஆக உயர்த்தியுள்ளது. தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஜே.இ.இ மெயின் 2021 இன் நான்காவது மற்றும் கடைசி அமர்வு முதலில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Jee main 2021 may session nta extends last date for registration exam dates changed jeemain nta nic in

Best of Express