Advertisment

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Application Correction JEE Main 2021 Exam : கால அவகாசம் முடிந்த பின்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது

author-image
WebDesk
New Update
JEE Main 2021: தேர்வு மையத்திற்குள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

NTA JEE Main 2021 application Correction Window: 2021ம் ஆண்டு ஜேஇஇ  மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை அளித்துள்ளது. இந்த வசதி ஜனவரி 27 முதல் ஜனவரி 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தங்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது ஏதேனும் பிழை செய்திருந்தால், இணையதளத்திற்குச் சென்று, தேவைப்படுகின்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதற்கான,  அதிகாரப்பூர்வ வலைத்தளம் jeemain.nta.nic.in ஆகும்.

படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் மாணவர்கள் திருத்த முடியாது. விண்ணப்பதாரரின்  பெயர், தொடர்பு / முகவரி விவரங்கள், உடல் ஊனமுற்றோர் விவரம், கல்வித் தகுதி, பிறந்த தேதி, தேர்வு மையங்கள் உள்ளிட்ட சில தகவல்கள் இறுதியானதாக கருதப்படும்.

விவரங்களைத் திருத்துவதற்கான கால அவகாசம் முடிந்த பின்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால்  விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜே.இ.இ (மெயின்) தேர்வு-2021-இன் முதல் கட்டம் 2021 பிப்ரவரி 23-ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இணையதளம் வாயிலாகக் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி முதல் ஜனவரி 16 வரி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்வதற்கான 2021 ஜேஇஇ தேர்வை மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம் என கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் ( மார்ச் , ஏப்ரல் & மே -2021) தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment