scorecardresearch

JEE முதன்மை தேர்வு 2023; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

JEE முதன்மை தேர்வு 2023; ஜே.இ.இ முதன்மை தேர்வில் அனைத்து பிரிவுகளுக்கும் எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் என்ன? முழுவிவரம் இங்கே

JEE-Main
ஜே.இ.இ முதன்மை தேர்வில் எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் விவரங்கள் (பிரதிநிதித்துவ படம்)

JEE Mains 2023: தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை தேர்வு 2023, இன் இரண்டாவது அமர்வை நடத்தி முடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, NTA தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிடும், அதன் பின்னர் இறுதி விடைக்குறிப்புகளை வெளியிடும், இதன் அடிப்படையில் JEE முதன்மை 2023 தேர்வின் ரிசல்ட் தயாரிக்கப்படும்.

FIITJEE நிபுணரான ரமேஷ் பாட்லிஷ் கருத்துப்படி, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான JEE அட்வான்ஸ்டு 2023க்கான JEE முதன்மைத் தகுதி கட்-ஆஃப் (NTA சதவீத மதிப்பெண்களின்படி) 88 முதல் 80 வரை இருக்கும். இருப்பினும், சில நிபுணர்கள் (நிதின் அரோரா, உதவி இயக்குநர் கல்வியாளர்கள் ENGG, Aakash BYJU’S Live) பொதுப் பிரிவில் 90- 92 வரை கட்-ஆஃப் வரலாம் என்று கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஆண்டுக்கு ரூ10- 20 லட்சம் சம்பளம்; VLSI துறையில் பி.டெக், டிப்ளமோ படிப்புகளை அறிமுகப்படுத்திய AICTE

EWS வகையைப் பொறுத்தவரை, கட் ஆஃப் 63-68 ஆக இருக்கும் மற்றும் OBC-NCL வகை மாணவர்களுக்கு 66-70 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியல் சாதி (SC) பிரிவு மாணவர்களுக்கு எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் 42-48 ஆகும். பழங்குடியினர் (ST) மாணவர்களுக்கான கட்-ஆஃப் 25-27 ஆக இருக்கும் என்று ரமேஷ் பாட்லிஷ் கூறியுள்ளார், அதேநேரம் நிதின் அரோரா 30-33 வரை உயரக்கூடும் என்று நம்புகிறார்.

JEE முதன்மை தேர்வின் முதல் அமர்வில், பொதுப் பிரிவினருக்கு 88-89, EWS பிரிவினருக்கு 63-65, OBCக்கு 66-67, SC 42-45 மற்றும் ST பிரிவு மாணவர்களுக்கு 25-27 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேபனைகளை எழுப்ப விருப்பம் வழங்கப்படும். அந்த ஆட்சேபனைகளின் அடிப்படையில், NTA இறுதி விடைக்குறிப்பைத் தயாரிக்கும், அதைத் தொடர்ந்து JEE முதன்மை தேர்வு முடிவைத் தயாரிக்கும்.

JEE முதன்மை தேர்வு 2023க்குப் பிறகு, வெற்றி பெற்றவர்கள் JEE Advanced 2023க்கு பதிவு செய்யலாம். தேர்வு ஜூன் 4 அன்று நடத்தப்பட உள்ளது. தாள் 1 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும், மற்றும் தாள் 2 அதே நாளில் மாலை 2.30 மணி முதல் மாலை 5:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Jee main 2023 nta concludes session 2 exams check expected cut off for jee advanced 2023 jeemain nta nic in