JEE Main 2024; ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? கடைசி வாரத்தில் செய்ய வேண்டியது இதுதான்!

ஜனவரி 24 முதல் JEE முதன்மை 2024 தேர்வு, அமர்வு 1; தேர்வுக்கு முந்தைய கடைசி வாரங்களில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள் இங்கே

ஜனவரி 24 முதல் JEE முதன்மை 2024 தேர்வு, அமர்வு 1; தேர்வுக்கு முந்தைய கடைசி வாரங்களில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள் இங்கே

author-image
WebDesk
New Update
JEE preparation

ஜனவரி 24 முதல் JEE முதன்மை 2024 தேர்வு, அமர்வு 1; தேர்வுக்கு முந்தைய கடைசி வாரங்களில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள் இங்கே

கட்டுரையாளர்: ரமேஷ் பாட்லிஷ்

JEE Main 2024: ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான கடைசி சில நாட்களை, சுருக்கமாக திருப்புதல் செய்வதில் கவனம் செலுத்தி, கணக்கீடுகளைத் தீர்ப்பது மற்றும் தயாரிப்பில் உள்ள பலவீனமான பகுதிகளை சமாளித்து, ஒருவரின் தயாரிப்பை ஒருங்கிணைக்க பொதுவாகப் பயன்படுத்த வேண்டும்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024: Check study plan for last week before exam

இருப்பினும், பின்வரும் புள்ளிகளை மனதில் கொள்ள வேண்டும்:

- படிக்கும் போது கவனம் செலுத்தி நேர்மறையான அணுகுமுறையைப் பேணுங்கள்.

- நேர நிர்வாகத்துடன் JEE தர கணக்கீடுகளின் வினாடி வினாக்கள்/ மாதிரித் தேர்வுகளைத் தீர்ப்பதன் மூலம் வேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

- வேகம் மற்றும் துல்லியம் உங்கள் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும்.

வெற்றிகரமான தேர்வு மனோபாவத்தை உருவாக்க CBT (கணினி அடிப்படையிலான தேர்வு) முறையில் மாதிரி தேர்வுத் தொடரை விரும்புவது நல்லது. உங்கள் அட்டவணையின்படி குறிப்பிட்ட நேரத்தில் மாதிரித் தேர்வுகளை முயற்சிக்கவும். உங்கள் தவறுகளைச் சரிபார்த்து, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு தேர்விலும் வெற்றிபெற முயற்சிக்கவும்.

Advertisment
Advertisements

மாதிரித் தாள்கள் கேள்விகளின் வடிவத்தைப் பற்றிய நியாயமான யோசனையை உங்களுக்கு வழங்கும் மற்றும் நேர நிர்வாகத்தை மேம்படுத்த உதவும்.

கேட்கப்பட்ட கேள்விகளின் அளவைப் புரிந்துகொள்வதற்கு முந்தைய ஆண்டுகளின் JEE முதன்மை/ அட்வான்ஸ்டு தாள்களைப் பயிற்சி செய்து பார்க்கவும்.

- உங்கள் பலவீனமான பகுதிகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்கள் கருத்துக்களை மேம்படுத்தவும்.

- இது செலவழித்த நேரத்தின் தரம் மற்றும் அளவு மட்டும் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் தீவிரமான படிப்பிற்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை குறுகிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுக்கும்போது முழுமையாக ஓய்வெடுங்கள்.

- உள் அமைதி, சமநிலை, நம்பிக்கை மற்றும் செறிவு சக்தி ஆகியவற்றை வளர்க்க தியானத்தை பயிற்சி செய்யுங்கள். இவை மிகவும் முக்கியமானவை மற்றும் தேர்வு நாளில் உங்களுக்கு உதவும்.

- உங்களை மிகைப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு இரவும் ஐந்து முதல் ஆறு மணிநேரம் தூங்குவது அவசியம், குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான உண்மையான தேர்வுக்கு மூன்று-நான்கு நாட்களுக்கு முன்பு நல்ல தூக்கம் அவசியம். ரிலாக்‌ஷ் செய்யும் பயிற்சிகள் புத்துணர்ச்சியை மீட்டெடுக்க உதவும். பகலில் அதிக தூக்கத்தை தவிர்க்கவும்.

- எண் / முழு எண் வகை கேள்விகளின் பயிற்சிக்கு, JEE முதன்மை / JEE அட்வான்ஸ்டு அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஒரு புகழ்பெற்ற ஆதாரம் அல்லது மாதிரி தாள்களைப் பின்பற்றவும்.

ஒருவருக்குத் தயாரிப்பில் சரியான அணுகுமுறை இருந்தால், ஒரு நல்ல JEE முதன்மை மதிப்பெண் மிகவும் கடினம் அல்ல.

(எழுத்தாளர் FIIT JEE இல் நொய்டா/கிரேட்டர் நொய்டாவின் நிர்வாகப் பங்குதாரர் மற்றும் மையத் தலைவர்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main Exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: