தேசிய தேர்வு முகமை (NTA) கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை (JEE Main) 2024 அமர்வு 2 தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 1 முதல் 15 வரை நடைபெறவிருந்த JEE முதன்மை ஏப்ரல் 2024 தேர்வு, இப்போது ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெறும். JEE முதன்மை தேர்வு 2024 விண்ணப்பம் மார்ச் 2, 2024 வரை திறந்திருக்கும். விண்ணப்பதாரர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024 exam dates revised for session 2; online registration starts
JEE மெயின் தேர்வு, NITகள், IIITகள், GFTIகள் மற்றும் பிற பங்குபெறும் நிறுவனங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்கும். JEE Main 2024 தேர்வின் முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் JEE Advanced 2024 தேர்வுக்கு https://jeeadv.ac.in/ இணையதளத்தில் பதிவு செய்ய முடியும்.
அமர்வு 1 தேர்வுக்கான JEE Main 2024 தேர்வுக் கட்டணத்தை விண்ணப்பித்து வெற்றிகரமாகச் செலுத்தி, அடுத்த அமர்வை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அமர்வு 1 தேர்வில் வழங்கப்பட்டுள்ளபடி தங்களின் முந்தைய விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழைய வேண்டும். அந்த விண்ணப்பதாரர்கள் தாள், தேர்வு மொழி, மாநிலத் தகுதிக் குறியீடு, தேர்வு மைய நகரங்கள், கல்வித் தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை மட்டுமே தேர்வு செய்தால் போதும்.
இதற்கு முன் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட JEE முதன்மை விண்ணப்பப் படிவங்களை நிரப்ப அனுமதிக்கப்படுவதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“