இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளிலும் சேர்க்கைப் பெறலாம்.
Advertisment
இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் என்.ஐ.டி.,களில் 50% இடங்கள் உள்ளூர் மாநில மாணவர்களுக்கும் 50% இடங்கள் வெளிமாநில மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 31 என்.ஐ.டி.,கள் உள்ளன. தமிழகத்தில் திருச்சியில் ஒரு என்.ஐ.டி உள்ளது. இது என்.ஐ.டி.,களில் முதன்மை நிறுவனமாகவும், NIRF தரவரிசையில் 8 ஆம் இடத்திலும் உள்ளது.
இந்தநிலையில், என்.ஐ.டி திருச்சியில் உள்ளூர் மாநில இடஒதுக்கீட்டின்படி இடங்களை பெறுவது எப்படி என கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், என்.ஐ.டி.,களில் உள்ள 50% மாநில ஒதுக்கீட்டு இடங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் சொந்த மாநிலத்தில் உள்ளூர் மாநில ஒதுக்கீட்டில் இடம் பெற முடியாது. வெளி மாநிலத்தவராகவே கருதப்படுவார்.
எனவே திருச்சி என்.ஐ.டி.,யில் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் படித்தால் உள்ளூர் மாநில இடஒதுக்கீட்டில் சீட் பெறலாம். இல்லை என்றால் அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையிலே சீட் பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“