JEE Main 2024: தேசிய தேர்வு முகமை (NTA) ஜே.இ.இ முதன்மைத் தேர்வு தாள் 2 முடிவை அறிவித்துள்ளது. பி.ஆர்க் (B.Arch) மற்றும் பி.பிளானிங் (B.Planning) தேர்வுகளை எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.ac.in இல் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024: NTA declares results for Paper 2 at jeemain.nta.ac.in
ஜே.இ.இ முதன்மைத் தேர்வு தாள் 2க்கு இரண்டு (ஜனவரி/ஏப்ரல்) அமர்வுகளிலும் மொத்தம் 99086 பொது விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 71009 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
ஜே.இ.இ முதன்மை 2024 தேர்வுக்காக B.Arch (அமர்வு 2) இல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 73362 ஆகும், அவர்களில் 36707 பேர் தேர்வெழுதியுள்ளனர். இதேபோல், ஜே.இ.இ முதன்மை 2024 தேர்வில் மொத்தம் 38105 விண்ணப்பதாரர்கள் B.Planning (அமர்வு 2) இல் பதிவு செய்தனர், அவர்களில் 16228 பேர் தேர்வெழுதியுள்ளனர்.
இந்த ஆண்டு, மொத்தம் 99086 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர், அவர்களில் 35817 பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள், 8881 பொதுப்பிரிவு EWS, 37341 OBC NCL மாணவர்கள், 11711 SC மாணவர்கள், 5336 எஸ்.டி மாணவர்கள், 370 PWD மாணவர்கள் ஆவர். ஆண் தேர்வர்கள் 38773 பேரும் மற்றும் 32236 பெண் தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு B.Arch டாப்பர்கள் முறையே ஜார்கண்ட்டைச் சேர்ந்த சுலக்னா பசாக் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்து ஆகியோர் ஆவர். பி.பிளானிங் படிப்பில் ஆந்திராவை சேர்ந்த கொலசானி சாகேத் பிரணவ் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அருண் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்தியதால், மூன்று தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“