JEE Mains Results 2024: ஜே.இ.இ முதன்மைத் தேர்வு அமர்வு 2-க்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அமர்வு 2 தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அணுகலாம் — jeemain.nta.ac.in.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024 season 2 result declared at jeemain.nta.ac.in; check toppers list
இம்முறை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை 13 கூடுதலாக அதிகரித்துள்ளது, மொத்தம் 56 பேர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், 56 பேரில் 2 பேர் பெண்கள், மீதமுள்ளவர்கள் ஆண்கள்.
மேலும், ஜே.இ.இ தேர்வில் நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்தியதற்காக மொத்தம் 39 தேர்வர்கள் 3 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.
ஜே.இ.இ முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு முடிவைப் பதிவிறக்க, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் தேவைப்படும். கூடுதலாக, தேர்வு முடிவுகளுடன் சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.
ஜே.இ.இ முதன்மை தேர்வு ரிசல்ட் தெரிந்துக் கொள்வது எப்படி?
முதலில், jeemain.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ முடிவு இணையதளத்திற்குச் செல்லவும்.
அடுத்து, “வியூ ஸ்கோர் கார்டு” அல்லது “ஜே.இ.இ முதன்மை 2024 முடிவைக் காண்க” என்று லேபிளிடப்பட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், கேட்கும் போது உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
சமர்ப்பித்தவுடன், உங்கள் முடிவு உங்கள் மதிப்பெண்கள் திரையில் காட்டப்படும்.
இறுதியாக, எதிர்கால குறிப்புக்காக ஜே.இ.இ தேர்வு முடிவுப் பக்கத்தை அச்சிட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை, ஜே.இ.இ முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 12 வரை நடத்தப்பட்டது. அறிவிக்கப்பட்ட இறுதி விடையின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு விடைக் குறிப்புகள் தொடர்பான எந்தக் குறையும் ஏற்கப்படாது என்று ஜே.இ.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced 2024) தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“