JEE Main 2024: இன்று நடைபெற்ற கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) முதன்மை (JEE Main) தேர்வின் B.Tech, B.E வினாத் தாள் ஆவரேஜ் அளவில் இருந்தது. "கடின வரிசையின் அடிப்படையில், கணிதம் மிதமானதாக இருந்தது, வேதியியல் எளிதாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, இந்த வினாத்தாள் மாணவர்களைப் பொறுத்தவரை மிதமான அளவில் இருந்தது,” என்று FIITJEE நொய்டாவின் தலைவர் ரமேஷ் பாட்லிஷ் முதல் ஷிப்ட் குறித்த மாணவர்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024 Session 2 (April 9) Exam Analysis: Lengthy numerical questions in Physics
JEE முதன்மை தேர்வு 2024 ஏப்ரல் 9 தேர்வு பகுப்பாய்வு
JEE முதன்மை தேர்வு B.Tech தாள் மூன்று பாடங்களைக் கொண்டிருந்தது, அவை இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம். அனைத்து பாடங்களிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. பிரிவு 1ல் ஒற்றை சரியான பதில்களுடன் 20 கொள்குறி வகை கேள்விகள் இருந்தன, பிரிவு 2 இல் 10 எண் அடிப்படையிலான கேள்விகள் இருந்தன, அவற்றில் ஐந்துக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும்.
கேள்விகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ (CBSE) வாரியத்தின் கிட்டத்தட்ட அனைத்து அத்தியாயங்களையும் உள்ளடக்கியது. வினாத்தாள் ஜனவரி அமர்வை விட சிறந்த அளவில் இருந்தது, என்று FIITJEE நிபுணர் கூறினார். கணிதப் பகுதியில் ஒரு சில கேள்விகள் நீளமாகவும் தந்திரமாகவும் இருந்தது, இருப்பினும் மிதமான அளவில் இருந்தது. கால்குலஸ் மற்றும் இயற்கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அனைத்து அத்தியாயங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
இயற்பியல் பகுதி சற்று எளிதாக இருந்தது, 12 ஆம் வகுப்பு NCERT அத்தியாயங்களிலிருந்து சில உண்மை அடிப்படையிலான கேள்விகளும் கேட்கப்பட்டன. எண் அடிப்படையிலான கேள்விகள் நீளமானவை ஆனால் எளிதாக இருந்தன, என்று FIITJEE நிபுணர் கூறினார்.
FIITJEE நிபுணரின் கூற்றுப்படி, வேதியியல் பகுதி எளிதானது மற்றும் NCERT யிலிருந்து சில உண்மை அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“