Advertisment

JEE Main 2024: ஜே.இ.இ முதன்மைத் தேர்வு; இந்தப் பொருட்களுக்கு தேர்வறையில் அனுமதி கிடையாது; பட்டியல் இங்கே

JEE Main 2024: ஜே.இ.இ முதன்மைத் தேர்வு வழிகாட்டுதல்கள்; தேர்வறை எவற்றை எல்லாம் கொண்டு செல்லலாம்? எவற்றை கொண்டு செல்லக் கூடாது; பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
jee exam

ஜே.இ.இ முதன்மைத் தேர்வு (பிரதிநிதித்துவ எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேசிய தேர்வு முகமை (NTA) ஏப்ரல் 4 முதல் கூட்டு நுழைவுத் தேர்வின் (JEE Main) 2024 அமர்வு 2-ஐ நடத்தத் தொடங்கும். பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் — https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024 Session 2: These things are allowed in the exam hall

இரண்டாவது அமர்வு தேர்வு ஏப்ரல் 4 முதல் 12 வரை நடைபெறும். அமர்வு 1 மதிப்பெண்ணை மேம்படுத்த விரும்புவோர் அமர்வு 2 தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தகுதியைத் தயாரிக்கும் போது இரண்டு மதிப்பெண்களில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும்.

தேவையான ஆவணங்கள்

- விண்ணப்பதாரர்கள் தங்கள் ஜே.இ.இ (JEE) முதன்மை தேர்வு நுழைவுச்சீட்டுடன், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு முறையாக நிரப்பப்பட்ட சுய-அறிக்கையையும் (A4 அளவு தாளில் தெளிவான பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்) எடுத்துச் செல்ல நினைவில் கொள்ள வேண்டும்.

- வருகை தாளில் ஒட்ட கூடுதல் புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும்.

- ஆதார் அட்டை அல்லது பான் கார்டு போன்ற அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

— மாணவர்கள் தங்களுடைய தேர்வு நகரச் சீட்டையும் எடுத்துச் செல்லலாம், இருப்பினும், அது தேவையில்லை.

தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் விஷயங்கள்

- மாணவர்கள் வெளிப்படையான பால்பாயிண்ட் பேனாவை எடுத்துச் செல்லலாம்.

- தனிப்பட்ட கை சுத்திகரிப்பு (50 மில்லி), தேவைப்பட்டால் எடுத்துச் செல்லலாம்.

- ஒரு வெளிப்படையான தண்ணீர் பாட்டில்.

— தேர்வர் நீரிழிவு நோயாளியாக இருந்தால், சர்க்கரை மாத்திரைகள்/பழங்கள் (வாழைப்பழம்/ஆப்பிள்/ஆரஞ்சு போன்றவை).

ஜே.இ.இ மெயின் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள், கருவிகள், ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பை, பர்ஸ், காகிதம்/ ஸ்டேஷனரி/ வாசகப் பொருட்கள் (அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட பொருள்), உண்ணக்கூடிய பொருட்கள் மற்றும் தண்ணீர் (தளர்வான அல்லது பேக் செய்யப்பட்ட), மொபைல் போன்/ இயர்போன் / மைக்ரோஃபோன்/ பேஜர், கால்குலேட்டர், ஆவணப்பதிவு, ஸ்லைடு ரூல்ஸ், லாக் அட்டவணைகள், கேமரா, டேப் ரெக்கார்டர், கால்குலேட்டர் வசதிகளுடன் கூடிய மின்னணு கடிகாரங்கள், ஏதேனும் உலோகப் பொருள் அல்லது மின்னணு சாதனங்கள்/ பொருட்கள் ஆகியவற்றை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும், முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படும். தேர்வு எழுதுபவர்கள் காலை 7.30 மணிக்கும், மாலை ஷிப்டுக்கு பிற்பகல் 2 மணிக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பிறகு, JEE முதன்மை தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் கண்காணிப்பாளரால் வழங்கப்படும், விண்ணப்பதாரர்கள் முதல் ஷிப்டுக்கு காலை 8:50 மணிக்கும், இரண்டாவது ஷிப்டுக்கு மதியம் 2:50 மணிக்கும் வழிமுறைகளைப் படிக்க உள்நுழையலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment