Advertisment

JEE Mains 2024: மாதிரித் தேர்வுகள் எவ்வளவு முக்கியம்? எப்போது தொடங்க வேண்டும்?

JEE Main 2024 தேர்வுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், தயாரிப்பின் கடைசி கட்டத்தைத் தொடங்குவது முக்கியம். ஆனால் மாதிரித் தேர்வுகளைத் தொடங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் பதில்.

author-image
WebDesk
New Update
JEE preparation

JEE Main 2024 தேர்வுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், தயாரிப்பின் கடைசி கட்டத்தைத் தொடங்குவது முக்கியம்.

கட்டுரையாளர்: அஜய் சர்மா

Advertisment

கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மைத் தேர்வு மிகவும் போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வாகும், இது இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் சிலவற்றில் படிப்பதற்கான கதவைத் திறக்கிறது. இந்தத் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவதற்கு பல ஆண்டுகளாக நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்யும் ஆர்வமுள்ள பொறியாளர்களுக்கான தயாரிப்பு செயல்முறையின் இன்றியமையாத பகுதியாக மாதிரித் தேர்வுகள் உள்ளன. இந்த கட்டுரையில் மாதிரித் தேர்வுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், உங்கள் JEE முதன்மைத் தேர்வு தயாரிப்புத் திட்டத்தில் அவற்றைச் சேர்ப்பது எப்போது சிறந்தது என்பதை பற்றியும் பார்ப்போம்.

ஆங்கிலத்தில் படிக்க: JEE Main 2024: When should I start giving mock tests?

மாதிரித் தேர்வுகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது:

மாதிரி தேர்வுகள் உண்மையான தேர்விற்கான பயிற்சியைப் போன்றது, மாணவர்களுக்கு அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அளவிடவும், அவர்களின் நேர மேலாண்மை திறன்களை நன்றாக மாற்றவும் மற்றும் தேர்வு வடிவம் மற்றும் சூழ்நிலையுடன் வசதியாக இருக்கவும் வாய்ப்பளிக்கிறது. அவை தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், தேர்வு அழுத்தத்தைக் குறைக்கவும், சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் உதவும். எனவே, உங்கள் படிப்பு அட்டவணையில் மாதிரித் தேர்வுகளைச் சேர்ப்பது முழுமையான தயாரிப்புக்கு முக்கியமானது என்பது தெளிவாகிறது.

தயாரிப்பின் ஆரம்ப கட்டம்:

ஜே.இ.இ மெயின் தேர்வு வெற்றிக்கான பயணம் மாரத்தான் ஓட்டம் போன்றது, ஸ்பிரிண்ட் (வேகமான) ஓட்டம் அல்ல. உங்கள் தயாரிப்பு கட்டத்தின் ஆரம்பத்திலேயே மாதிரித் தேர்வுகளைத் தொடங்குவது, உங்கள் தற்போதைய புரிதல் நிலை குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை உங்களுக்கு வழங்குவதோடு, அதிக கவனம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியவும் உதவும். ஆரம்ப கட்டத்தில் மாதிரித் தேர்வுகளைத் தொடங்குவது, ஒரு அடிப்படையைத் தயாரிக்கவும், தேர்வு முறையைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது, மேலும் இலக்கு படிப்புத் திட்டத்தை உருவாக்குவதையும் எளிதாக்குகிறது.

உண்மையான தேர்வுக்கு 3 முதல் 4 மாதங்களுக்கு முன்பு மாதிரி தேர்வுகளை தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 2024 ஆம் ஆண்டில், ஜே.இ.இ மெயின் தேர்வின் முதல் கட்டம் ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ளது, எனவே அதற்கான ஆரம்ப கட்டம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இருந்தது. எனவே முதல் அமர்வில் தேர்வு எழுத மாணவர்கள், தங்கள் ஆரம்ப கட்ட தயாரிப்பை முடித்துள்ளனர். இது மாதிரித் தேர்வுகளில் உங்கள் செயல்திறனின் அடிப்படையில் சுய ஆய்வு மற்றும் இலக்கு மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் போதுமான நேரத்தை அனுமதிக்கிறது.

தயாரிப்பின் நடுக் கட்டம்:

​​உங்கள் JEE முதன்மைத் தேர்வின் தயாரிப்பின் நடுக் கட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் நீங்கள் உங்கள் திறன்களைக் கூர்மைப்படுத்தி உங்கள் உத்திகளைச் சரிசெய்யலாம். இந்த கட்டத்தில், நீங்கள் பாடத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். இந்தக் கட்டத்தில் உங்கள் வழக்கத்தில் மாதிரித் தேர்வுகளை இணைத்துக்கொள்வது, உங்கள் முன்னேற்றத்தை மதிப்பிடவும், பலவீனமான பகுதிகளை அடையாளம் காணவும், உங்கள் நேர மேலாண்மைத் திறனைச் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

உண்மையான தேர்வுக்கு சுமார் 2 முதல் 3 மாதங்களுக்கு முன், முழு நீள மாதிரி தேர்வுகளை தவறாமல் எழுதிப் பார்க்கவும். இது நீண்ட தேர்வுக்கான திறனை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், உண்மையான தேர்வு நிலைமைகளின் யதார்த்தமான முன்னோட்டத்தையும் வழங்குகிறது. இந்தப் மாதிரித் தேர்வுகளில் உங்கள் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வது, தலைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், உங்கள் படிப்பு நேரத்தை மிகவும் திறமையாக ஒதுக்கவும் உதவும்.

(எழுத்தாளர் தேசிய கல்வி இயக்குனர், ஆகாஷ் BYJU'S இன் பொறியியல்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jee Main Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment