ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு சரியான விடையை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
Advertisment
இந்தியாவின் மிக முக்கியமான, கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்று ஜே.இ.இ முதன்மைத் தேர்வு. இதில் வெற்றிப் பெற்றால், ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெறுவதுடன், என்.ஐ.டி போன்ற தலைசிறந்த நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம்.
ஆனால் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜே.இ.இ தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்தநிலையில், ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிக்கலாம் என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
உங்களுக்கு தவறு என தெரியும் சாய்ஸ்களை முதலில் நீக்கலாம். அடுத்ததாக, விடைகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமை அடிப்படையில், சாய்ஸ்களை நீக்கலாம்.
Advertisment
Advertisement
மேலும் கடந்த 6 ஆண்டு தரவுகள் அடிப்படையில் ஆப்ஷன் டி குறைவான சரியான பதிலாக இருந்துள்ளது. எனவே அதன் அடிப்படையிலும் முடிவு செய்யலாம். மேலும் பி மற்றும் சி ஆப்ஷன்கள் சரியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், ஆப்ஷன் டி சில சமயம் சரியாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கூறிய அனைத்தும் சரி அல்லது மேற்கூறிய அனைத்தும் தவறு என்ற விடை வரும்போது ஆப்ஷன் டி சரியாக இருக்க வாய்ப்புள்ளது.
சில ஆப்ஷன்கள் குழப்பமாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற கேள்விகளில் ஏ ஆப்ஷன் பெரும்பாலும் சரியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்ததாக எதிர் எதிரான ஆப்ஷன்களில் இரண்டாவதாக இருப்பது சரியான ஆப்ஷனாக இருக்க வாய்ப்புள்ளது.
5 ஆப்ஷன்கள் கொண்ட வினாக்களில் ஆப்ஷன் ஈ சரியாக இருக்க வாய்ப்புள்ளது. சரியா? தவறா? வகை வினாக்களில் 56% சரி என்பது சரியாக இருக்க வாய்ப்புள்ளது. கணித வினாக்களில் ஆப்ஷன் பி மற்றும் ஆப்ஷன் சி அதிகமாக சரியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த அறிவுரைகள் அனைத்தும் உங்களுக்கு அந்த கேள்விக்கு முழுவதுமாக விடை தெரியாத நிலையில் பயன்படுத்த வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.