தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) ஜே.இ.இ மெயின் 2025 சீசன் 1-க்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த முதல் தாள் தேர்வை பி.டெக் படிக்க விரும்புபவர்கள் எழுதலாம். தேர்வு எழுத
விண்ணப்பித்துள்ளவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அட்டவணையை பார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ மெயின் தேர்வு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 15 நகரங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.
தேசிய தேர்வு முகமை (NTA) ஜே.இ.இ மெயின் 2025 அமர்வு 1-க்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2 ஷிப்ட்களாக தேர்வு நடைபெறுகிறது. முதல் தாள், இரண்டாம் தாள் என தேர்வு இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது.
காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் ஷிப்ட் தேர்வு நடைபெறும். மதியம் 3 மணி முதல் 6.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வு நடைபெறும். ஜனவரி 22,23,24,28,29 ஆகிய தேதிகளில் பி.இ, பி.டெக் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.
ஜனவரி 30, 2025 அன்று தேர்வு 2ஏ (பி.ஆர்க்), தேர்வு 2பி (பி.பிளானிங்), தேர்வு 2ஏ மற்றும் 2பி (இரண்டும் பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்) தேர்வு மதிய ஷிப்ட் நேரத்தில் நடைபெறுகிறது.